தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Peter Allan Passes Away: ஆஸி., முன்னாள் கிரிக்கெட் வீரர் பீட்டர் ஆலன் காலமானார்

Peter Allan Passes Away: ஆஸி., முன்னாள் கிரிக்கெட் வீரர் பீட்டர் ஆலன் காலமானார்

Manigandan K T HT Tamil

Jun 22, 2023, 05:29 PM IST

google News
Cricket Australia: ஷெஃபீல்ட் ஷீல்டு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்று பவுலர்களில் ஒருவர் ஆவார்.
Cricket Australia: ஷெஃபீல்ட் ஷீல்டு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்று பவுலர்களில் ஒருவர் ஆவார்.

Cricket Australia: ஷெஃபீல்ட் ஷீல்டு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்று பவுலர்களில் ஒருவர் ஆவார்.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் ஆலன் காலமானார்.

அவருக்கு வயது 87. அவர் ஆஸ்திரேலிய அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியிருக்கிறார். ஷெஃபீல்ட் ஷீல்டு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்று பவுலர்களில் ஒருவர் ஆவார்.

1965-66 ஆஷஸ் தொடரின் போது, ​​ஆலன் தனது சொந்த மைதானமான கப்பாவில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அந்த போட்டியில், அவர் இங்கிலாந்து கேப்டன் மைக் ஸ்மித்தின் விக்கெட் உட்பட இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அவர் 1965 இல் ஆஸ்திரேலியாவுடனான கரீபியன் சுற்றுப்பயணத்தில் ஆலன் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால், அவர் உடல் நல குறைவு காரணமாக கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடவில்லை.

1935ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி பிரிஸ்பேனில் பிறந்தார் ஆலன். முதல் தர கிரிக்கெட்டில் 57 ஆட்டங்களில் அவர் விளையாடியிருக்கிறார்.

அதில் 689 ரன்களை குவித்துள்ள அவர் 11,498 பந்துகளை வீசி 206 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஒரு டெஸ்டில் விளையாடி 192 பந்துகளை வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். இவரது பெஸ்ட் 2/58.

இவரது மறைவுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வலது கை வேகப்பந்து வீச்சாளரான ஆலன், 1959-60 காலகட்டத்தில் குயின்ஸ்லாந்து அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன் பிறகு அவர் விக்டோரியாவில் சிறிது காலம் பணியாற்றினார், மேலும் 1963 இல் குயின்ஸ்லாந்து திரும்பும் வரை கிரிக்கெட்டுடன் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் இருந்து வந்தார்.

குயின்ஸ்லாந்து கிரிக்கெட் தலைவர் கிறிஸ் சிம்ப்சன் கூறுகையில், "பீட்டர் ஒரு பந்து வீச்சாளராக சிறந்த திறமையைக் கொண்டிருந்தார்" என்றார்.

இவரது மறைவுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகமும் இரங்கள் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

அடுத்த செய்தி