தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Fih Hockey: இந்திய ஜூனியர் ஹாக்கி அணி வெற்றித் தொடக்கம்.. கொரியாவை பந்தாடியது!

FIH Hockey: இந்திய ஜூனியர் ஹாக்கி அணி வெற்றித் தொடக்கம்.. கொரியாவை பந்தாடியது!

Manigandan K T HT Tamil

Dec 06, 2023, 11:18 AM IST

google News
இந்த வெற்றியின் மூலம் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பிரிவு சி புள்ளிகள் அட்டவணையில் ஸ்பெயினுக்குப் பின்னால் இரண்டாவது இடத்தில் உள்ளது, (olympics.com)
இந்த வெற்றியின் மூலம் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பிரிவு சி புள்ளிகள் அட்டவணையில் ஸ்பெயினுக்குப் பின்னால் இரண்டாவது இடத்தில் உள்ளது,

இந்த வெற்றியின் மூலம் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பிரிவு சி புள்ளிகள் அட்டவணையில் ஸ்பெயினுக்குப் பின்னால் இரண்டாவது இடத்தில் உள்ளது,

இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்காக ஆரைஜீத் சிங் ஹண்டால் ஹாட்ரிக் கோல் அடித்தார். இந்தியா தனது அடுத்த குரூப் ஆட்டத்தில் ஸ்பெயினுடன் வியாழக்கிழமை மோதுகிறது.

இரண்டு முறை சாம்பியனான இந்தியா, செவ்வாய்க்கிழமை மலேசியாவின் கோலாலம்பூரில் கொரியாவை எதிர்த்து 4-2 என்ற கோல் கணக்கில் ஜெயித்து எஃப்ஐஎச் ஹாக்கி ஆண்கள் ஜூனியர் உலகக் கோப்பை 2023 பயணத்தைத் தொடங்கியது.

இந்த எஃப்ஐஎச் ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பைப் பதிப்பின் முதல் ஹாட்ரிக் கோல் சாதனையை ஆரைஜீத் சிங் ஹண்டால் (11’,16’, 41’ நிமிடத்தில்) அடித்தார், அதே நேரத்தில் அமந்தீப் (29’வது நிமிடத்தில்) இந்தியாவுக்காக ஸ்கோர்ஷீட்டில் இடம் பிடித்தார். தென் கொரியாவின் டோஹ்யுன் லிம் (38’வது நிமிடத்தில்) மற்றும் மின்க்வோன் கிம் (45’வது நிமிடத்தில்) ஆகியோர் இரண்டு கோல்களை அடித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பிரிவு சி புள்ளிகள் அட்டவணையில் ஸ்பெயினுக்குப் பின்னால் இரண்டாவது இடத்தில் உள்ளது, முந்தைய நாளில் கனடாவை 7-0 என வீழ்த்தியது ஸ்பெயின். குழுவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

ஜூனியர் ஹாக்கி தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியா, போட்டியை அதிக வேகத்துடன் தொடங்கியது, ஆனால் கொரியா வீரர்களின் பாதுகாப்பு முறை ஆட்டம், முதல் 10 நிமிடங்களில் இந்தியாவின் வேகத்தை மட்டுப்படுத்தியது. இருப்பினும், உலகின் 11-வது இடத்தில் உள்ள தென் கொரியா மறுமுனையில் தாக்குதல்களை நடத்த போராடியது.

இந்திய ஹாக்கி அணி தனது முதல் பெனால்டி கார்னரை 11வது நிமிடத்தில் பல பாஸ்களுக்குப் பிறகு துணைக் கேப்டன் ஆரைஜீத் சிங் ஹண்டால் நேர்த்தியாக கோலாக மாற்றினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி