FIH Hockey Junior World Cup 2023: முக்கியமான போட்டியில் ஸ்பெயினிடம் வீழ்ந்த இந்தியா
Dec 08, 2023, 05:02 PM IST
Rohit (33') scored the only goal for India. For Spain, Pol Cabre Verdiell (1', 41') and Andreas Rafi (18', 60') were the goal scorers
எஃப்ஐஎச் ஹாக்கி ஆண்கள் ஜுனியர் உலகக் கோப்பை 2023 தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. தலைநகர் கோலா லம்பூரில் உள்ள தேசிய ஹாக்கி ஸ்டேடியத்தில் இந்தியா - மலேசியா அணிகள் மோதின.
பலம் மிக்க அணியான ஸ்பெயினுக்கு ஈடுகொடுக்கும் விதமாக இந்திய வீரர்கள் ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் முழு ஆட்டநேர முடிவில் 4-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது ஸ்பெயின் அணி.
ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே ஸ்பெயின் அணி கோல் அடித்து முன்னேறியது. இதைத்தொடர்ந்து 18வது நிமிடத்தில் இரண்டாவது கோலும் அடித்து இந்தியாவுக்கு நெருக்கடி அளித்தது.
பின் ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் இந்திய வீரர் ரோஹித் அணிக்கு முதல் கோல் அடித்தார். இதையடுத்து 41, 60 ஆகிய நிமிடங்களில் ஸ்பெயின் அணி அடுத்தடுத்து கோல்கள் அடித்தன.
இந்திய அணி அடுத்து கோல்கள் எதுவும் அடிக்கவில்லை. ஆட்டத்தின் கடைசி 15 நிமிடத்தில் இந்திய வீரர்கள் விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதிலும், கோல் கிடைக்கவில்லை.
இந்தியா தனது அடுத்த போட்டியில் கனடா அணியை நாளை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது
இந்தியா இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. கனடாவுக்கு எதிரான போட்டியில் ஆறுதல் வெற்றி பெறுமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்