தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Fifa Worldcup 2022:பெனால்டி வாய்ப்பில் ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்குள் குரோஷியா

Fifa worldcup 2022:பெனால்டி வாய்ப்பில் ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்குள் குரோஷியா

Dec 06, 2022, 12:04 PM IST

ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டியில் ஜப்பான் - குரோஷியா முழு ஆட்ட நேரம் முடிவு வரை தலா 1 கோல்களுடன் சமநிலை பெற, கூடுதல் நேரத்தில் கோல்கள் அடிக்க தவறியது. இதனால் பெனால்ட் வாய்ப்பு வழங்கப்பட்டதில் குரோஷியா வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது. (AFP)
ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டியில் ஜப்பான் - குரோஷியா முழு ஆட்ட நேரம் முடிவு வரை தலா 1 கோல்களுடன் சமநிலை பெற, கூடுதல் நேரத்தில் கோல்கள் அடிக்க தவறியது. இதனால் பெனால்ட் வாய்ப்பு வழங்கப்பட்டதில் குரோஷியா வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.

ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டியில் ஜப்பான் - குரோஷியா முழு ஆட்ட நேரம் முடிவு வரை தலா 1 கோல்களுடன் சமநிலை பெற, கூடுதல் நேரத்தில் கோல்கள் அடிக்க தவறியது. இதனால் பெனால்ட் வாய்ப்பு வழங்கப்பட்டதில் குரோஷியா வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.

பிபா உலகக் கோப்பை 2022இல் பெனால்ட் வரை சென்று முடிவு வந்த போட்டியாக ஜப்பான் - குரோஷியா இடையிலான நாக்அவுட் போட்டி அமைந்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

ISL 2024 Final: ஐபிஎல்-இல் விட்டதை ஐஎஸ்எல்-இல் பிடித்த மும்பை! இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்

Mallika Nadda: ஸ்பெஷல் ஒலிம்பிக் ஆசிய பசிபிக் ஆலோசனை கவுன்சில் தலைவராக மல்லிகா நட்டா நியமனம்

Olympic Qualifiers: ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்க சர்வதேச பயிற்சி: நன்றி தெரிவித்த ஃபென்சர் தனிக்ஷா

Olympic 2024: முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்பட 5 பிளேயர்ஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி

இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் ஆரம்பத்தில் இருந்தே கோல் அடிப்பதற்காக கடுமையான போராடின. போட்டி போட்டுக்கொண்டு இரு அணி வீரர்களும் விளையாடி வந்த நிலையில், 43வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் டெயசன் மேடா முதல் கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் ஜப்பான் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இதைத்தொடர்ந்து இரண்டாம் பாதியில் ஜப்பான் அணி தனது ஆதிக்கத்தை தொடர தவறியது. இதனால் 55வது நிமிடத்தில் குரோஷியா அணிக்கு முதல் கோல் கிடைத்தது. இந்த கோலை அந்நாட்டு வீரர் இவான் பெரிசிக் அடித்தார்.

இதன்பின்னர் மேலும் ஒரு கோல் முன்னிலை பெறுவதற்கு கடைசி நிமிடம் வரை இரு அணிகளும் முயற்சித்தனர். ஆனால் ஆட்ட நேரம் முடிவுற்ற நிலையில் 1-1 என இரண்டு அணிகளும் சமநிலையில் இருந்தன.

ஆட்டத்தின் முடிவை பெற கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் இரு நாட்டு வீரர்களும் சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி தங்களுக்கு எதிராக கோல் விழாமல் பார்த்துக்கொண்டனர். அதேசமயம் கூடுதல் கோல் அடிக்கவும் தவறினர்.

இதனால் அடுத்த வாய்ப்பை பெனால்டி ஷுட் அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில், கொடுக்கப்பட்ட 5 வாய்ப்புகளில் 3-1 என்ற கணக்கில் குரோஷியா அணி ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

ஜப்பான் வீரர்கள் பெனால்டி வாய்ப்பில் அடித்த மூன்று கோல்களை சரியாக தடுத்து ஆட்டத்தின் நாயகனாக ஜொலித்தார் குரோஷியா அணி கோல்கீப்பர் டோமினிக் லிவாகோவிக்.

டாபிக்ஸ்