தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Fifa World Cup 2022: ஸ்விட்சர்லாந்தை பந்தாடிய போர்ச்சுகல் காலிறுதிக்கு தகுதி

Fifa world cup 2022: ஸ்விட்சர்லாந்தை பந்தாடிய போர்ச்சுகல் காலிறுதிக்கு தகுதி

Dec 07, 2022, 05:48 PM IST

google News
ஸ்விட்சர்லாந்து அணிக்கு எதிராக கோல் மழை பொழிந்த போர்ச்சுகல் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது. (AFP)
ஸ்விட்சர்லாந்து அணிக்கு எதிராக கோல் மழை பொழிந்த போர்ச்சுகல் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

ஸ்விட்சர்லாந்து அணிக்கு எதிராக கோல் மழை பொழிந்த போர்ச்சுகல் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றின் கடைசி போட்டி போர்ச்சுகல் - ஸ்விட்சர்லாந்து இடையே நடைபெற்றது. 

இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த போர்ச்சுகல் கோல் மழை பொழிந்தது. மொத்தம் 6 கோல்கள் அடித்து மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

ஆட்டத்தின் முதல் பாதியிலேயே 2 கோல்கள் அடித்த போர்ச்சுகல் அணி முன்னிலை பெற்றது. 17வது நிமிடத்தில் கோன்கலோ ராமோஸ், 33வது நிமிடத்தில் பெப்பே ஆகியோர் கோல் அடித்தனர்.

இதைத்தொடர்ந்து இரண்டாம் பாதியில் ஆதிக்கத்தை தொடர்ந்த போர்ச்சுகல் வீரர்கள் 55வது நிமிடத்தில் மூன்றாவது கோல் அடித்தனர். இந்த கோலை கோன்கலோ ராமோஸ் அடித்தார்.

இதனால் ஸ்விட்சர்லாந்து வீரர்களுக்கு நெருக்கடி ஏற்பட்ட நிலையில், அந்த அணி வீரர் அகாங்ஜி 58வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். அதற்கு பதிலடியாக போர்ச்சுகல் வீரர் ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் கோன்கலோ ராமோஸ் தனது அணிக்கான நான்காவது கோல் அடித்தார். இது அவருடைய மூன்றாவது கோலாக அமைந்தது.

இதன் பின்னரும் போர்ச்சுகல் வீரர்கள் கோல் மழையை பொழிந்தனர். ஆட்டத்தின் 73வது நமிடத்தில் ஜோவோ பெலிக்ஸ், அதே நிமிடத்தில் கிறிஸ்டினா ரொனாஸ்டோவும், 90+2வது நிமிடத்தில் ரஃபேல் லியோ ஆகியோர் கோல் அடிக்க மொத்தம் 6 கோல்களை போர்ச்சுகல் அணி பெற்றது.

இதனால் முழு ஆட்ட நேர முடிவில் 6-1 என்ற கோல் கணக்கில் மிகப் பெரிய வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி