fifa world cup 2022: காலிறுதி போட்டிகளில் விளையாடும் அணிகளின் முழு விவரம்
Dec 08, 2022, 06:03 PM IST
பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதி போட்டிக்கு ஐந்து ஐரோப்பியா, இரண்டு தென் அமெரிக்கா அணிகளும், ஒரு ஆப்பரிக்கா அணியும் தகுதி பெற்றுள்ளது. ஆசிய அணிகள் இந்த முறை நாக்அவுட் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்துள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து தொடர் தொடங்கி 17 நாள்களில் மொத்தம் 56 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் பங்கேற்ற 32 அணிகளில் 24 அணிகள் தொடரை விட்டு வெளியேறி, தற்போது 8 அணிகள் காலிறுதி போட்டியில் விளையாடவுள்ளன.
இதையடுத்து காலிறுதி போட்டிகள் டிசம்பர் 9 மற்றும் 11ஆம் தேதிகளில் இந்திய நேரப்படி 8.30 மற்றும் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறுகிறது.
நாக்அவுட் சுற்று போட்டிகளில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், குரோஷியா - ஜப்பான், ஸ்பெயின் - மொராக்கோ அணிகள் மோதிய போட்டிகள் பொன்ல்டி ஷூட் அவுட் வரை சென்று போட்டி முடிவுகள் கிடைத்தது. முன்னாள் சாம்பியன் அணியை ஸ்பெயினை வீழ்த்தி முதல் முறையாக காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள மொராக்கோ அணி, ஆப்பரிக்கா கண்டத்திலிருந்து தகுதி பெற்ற ஒரே அணி என்ற பெருமையை பெறுகிறது.
இதையடுத்து டிசம்பர் 9ஆம் தேதி நடைபெற இருக்கும் காலிறுதி போட்டியில் குரோஷியா - பிரேசில் மற்றும் நெதர்லாந்து - அர்ஜென்டினா அணிகள் மோதவுள்ளன.
இதைத்தொடர்ந்து டிசம்பர் 10ஆம் தேதி நடைபெறும் போட்டியில் மொராக்கோ - போர்ச்சுகல் அணியும், டிசம்பர் 11இல் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து - பிரான்ஸ் அணிகளும் மோதவுள்ளன.
காலிறுதிக்கு தகுதி பெற்ற அணிகளில் எவ்வாறு வெற்றி பெற்றன என்பதை பார்ககலாம்.
நெதர்லாந்து அணி அமெரிக்காவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது
அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது
பிரான்ஸ் மற்றொரு ஐரோப்பிய அணியான போலாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது
ஆப்பரிக்கா அணியான செனகல் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இங்கிலாந்து
ஜப்பான் - குரோஷியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என சமநிலை பெற்ற நிலையில், பெனால்டி ஷூட் அவுட்டில் 3-1 என்ற கணக்கில் குரோஷியா வெற்றி பெற்றது
ஆசிய அணியான தென் கொரியாவை, தென் அமெரிக்கா அணியான பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது
பரபரப்பாக நடைபெற்ற ஸ்பெயின் - மொராக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-0 என்ற கணக்கில் மொராக்கோ வெற்றி பெற்றது
போர்ச்சுகல் அணி 6-1 என்ற கோல் கணக்கில் ஸ்விட்சர்லாந்து அணியை வீழ்த்தியது
டாபிக்ஸ்