தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Fifa World Cup 2022: நெதர்லாந்து தந்த டுவிஸ்ட்!ஆனாலும் அரையிறுதியில் அர்ஜெண்டினா

fifa world cup 2022: நெதர்லாந்து தந்த டுவிஸ்ட்!ஆனாலும் அரையிறுதியில் அர்ஜெண்டினா

Dec 10, 2022, 10:04 PM IST

google News
நெதர்லாந்து அணியை பெனால்டி முறையில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது அர்ஜெண்டினா. இந்த உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு நுழைந்த ஒரே தென்அமெரிக்கா அணியாக உள்ளது. (AFP)
நெதர்லாந்து அணியை பெனால்டி முறையில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது அர்ஜெண்டினா. இந்த உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு நுழைந்த ஒரே தென்அமெரிக்கா அணியாக உள்ளது.

நெதர்லாந்து அணியை பெனால்டி முறையில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது அர்ஜெண்டினா. இந்த உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு நுழைந்த ஒரே தென்அமெரிக்கா அணியாக உள்ளது.

பிபா உலகக் கோப்பை தொடர் இரண்டாவது காலிறுதிபோட்டி அர்ஜெண்டினா - நெதர்லாந்து இடையே நடைபெற்றது. உலக சாம்பியனமான அர்ஜெண்டினா ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்ததன் விளைவாக 35வது நிமிடத்தில், மெலினா மூலம் முதல் அணிக்கு முதல் கோல் கிடைத்தது.

இதன் மூலம் முதல் பாதி வரை 1-0 என்ற கணக்கில் அர்ஜெண்டினா முன்னிலை வகித்தது. இதன் பின்னர் இரண்டாம் பாதியில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்த அர்ஜெண்டினா அணி, கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி மூலம் ஆட்டத்தின் 73வது நிமிடத்தில் இரண்டாவது கோல் பெற்றது.

இதனால் 2 கோல்கள் முன்னிலை பெற்று நெதர்லாந்துக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. ஆனால் ஆட்டம் முடிய 10 நிமிடங்கள் மீதம் இருக்கும் போது முதல் டுவிட்டாக 83வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் வெக்ஹோர்ஸ்ட் தனது அணிக்கான முதல் கோல் அடித்தார். இதன்பின்னர் முழு நேரம் முடியும்போது விரய நேரமாக 11 நிமிடங்கள் அளிக்கப்பட்ட நிலையில் 90+11வது நிமிடத்தில் நெதர்லாந்து வீர்ர ஆட்டத்தின் இரண்டாவது டுவிஸ்ட்டாக வெகோர்ஸ்ட் இரண்டாவது கோல் அடித்து அர்ஜெண்டினாவின் கனவை தகர்த்தார்.

இதையடுத்து இரு அணிகளும் கூடுதல் நேரத்தில் விளையாடிய நிலையில், அதிலும் கோல்களை அடிக்க தவறின. இதனால் பெனால்டி மூலம் வெற்றியாளரை தேர்வு செய்யும் நிலை ஏற்பட்டது. இதில் 4-3 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா வெற்றி பெற்றது.

கிடைத்த வாயப்புகள் அனைத்தையும் அர்ஜெண்டினா கோல் ஆக்கிய நிலையில், நெதர்லாந்து ஒரு வாய்ப்பை வீணடித்ததால் தோல்வியை தழுவியது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி