தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Fide Grant Swiss Chess: முன்னாள் சாம்பியனை வீழ்த்திய இந்திய வீராங்கனை வைஷாலி

FIDE Grant Swiss Chess: முன்னாள் சாம்பியனை வீழ்த்திய இந்திய வீராங்கனை வைஷாலி

Nov 04, 2023, 05:27 PM IST

google News
ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் சதுரங்கப் போட்டியின் ஒன்பதாவது சுற்றில் முன்னாள் உலக சாம்பியனான பல்கேரியாவின் அன்டோனெட்டா ஸ்டெஃபனோவாவை வீழ்த்தி இந்தியாவின் ஆர் வைஷாலி முன்னிலையில் பெற்றார்.

ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டிகளில் பிரிட்டனில் உள்ள ஐல் ஆஃப் மேன் தீவு பகுதியில் நடைபெற்று வருகிறது. செஸ் விளையாட்டில் கெளரவம் மிக்க தொடராக கருதப்படும் இதில் இந்திய கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தாவின் சகோதரி ஆர் வைஷாலி பங்கேற்று விளையாடி வருகிறார்.

தனது வாழ்நாளில் மிகவும் முக்கியமான தொடரை பங்கேற்கும் அவர் நான்காவது கிராண்ட்மாஸ்டருக்கான நெறிமுறையை நிறைவு செய்திருப்பதுடன், இந்தியாவிலிருந்து இதை செய்யும் மூன்றாவது வீராங்கனை என்ற பெருமையை பெறுவதற்கு அவருக்கு இன்னும் ஏழு புள்ளிகள் மட்டுமே தேவை.

வைஷாலிக்கு இன்னும் இரண்டு சுற்றுகள் மீதமிருக்கும் நிலையில், சீனாவின் ஜோங்கி டான் என்பவரை அடுத்த எதிர்கொள்ளவுள்ளார். இதில் வெற்றி பெற்றால் பைஷாலி பட்டத்தை எட்டிப்பிடித்து விடலாம்.

ஓபன் பிரிவு போட்டியில், இந்தியாவின் விதித் குஜராத்தி, ரஷ்யாவின் ஆண்ட்ரே எசிபென்கோவுடன் மோதி 6.5 புள்ளிகளுடன் முன்னிலையில் பெற்றார்.

இந்த தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா, கஜகஸ்தானின் ரினாட் ஜுமாபயேவுக்கு எதிராக இரண்டாவது வெற்றியை பெற்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி