தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Fide Chess World Cup 2023: இறுதி போட்டியில் பிரக்ஞானந்தா - உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனுடன் மோதல்

FIDE Chess World Cup 2023: இறுதி போட்டியில் பிரக்ஞானந்தா - உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனுடன் மோதல்

Aug 22, 2023, 09:37 AM IST

google News
அதிவேகமாக காய்களை நகர்த்தும் டைபிரேக்கரில் 1-0 என்ற கணக்கில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்ற நிலையில் இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதுவரை கார்ல்சன் - பிரக்ஞானந்தா இடையிலான மோதலில் மூன்று முறை பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார்.

உலகக்கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டிலுள்ள பெக்கு நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதிய போட்டி டிராவில் முடிந்தது.

இதனால் வெற்றியாளர் யார் என்பதை தீர்மானக்கும் டைபிரேக்கர் போட்டி இருவருக்கும் இடையே நடைபெற்றது. அதிவேகமாக காய்களை நகர்த்தும் டைபிரேக்கரில் இருவரும் நான்கு ஆட்டங்களில் மோத வேண்டும். அதன்படி முதல் 2 ஆட்டம் டிராவில் முடிந்தது.

இதைத்தொடர்ந்து மூன்றாவது ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் விளையாடி பிரக்ஞானந்தா, 63வது காய் நகர்த்தலில் கருணாவை வீழ்த்தினர். பின்னர் கடைசி ஆட்டம் டிராவில் முடிய 1-0 என்ற கணக்கில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். இந்தப் போட்டியில் பிரக்ஞானந்தா 3.5 புள்ளிகள் பெற்றார். ஆனால் கருணா 2.5 புள்ளிகள் மட்டுமே பெற்றார்.

இறுதிபோட்டியில் பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரும், ஐந்து முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனை எதிர்கொள்கிறார்.

பிரக்ஞானந்தா - கார்ல்சென் ஆகியோருக்கு இடையிலான மோதல்களில் பிரக்ஞானந்தா மூன்று முறை கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற செஸ் தொடரில் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. எனவே அவரது வெற்றி பயணம் தொடரும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

தற்போது இறுதிபோட்டியில் நுழைந்திருக்கும் பிரக்ஞானந்தா, இந்த வெற்றியின் மூலம் அடுத்த ஆண்டு உலகின் டாப் 8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் கேன்டிடேட் செஸ் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 18 வயதாகும் பிரக்ஞானந்தா இந்த போட்டியில் தகுதி பெறும் மூன்றாவது இளம் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கேன்டிடேட் செஸ் போட்டியில் வெற்றி பெறும் வீரர். உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் விளையாடும் வாய்ப்பை பெறுவார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி