தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Australia 1st Innings: ஆஷஸில் முதல் முறையாக 5 விக்கெட் எடுத்த இங்கி., பவுலர்-ஆஸி., 317/10

Australia 1st Innings: ஆஷஸில் முதல் முறையாக 5 விக்கெட் எடுத்த இங்கி., பவுலர்-ஆஸி., 317/10

Manigandan K T HT Tamil

Jul 20, 2023, 07:47 PM IST

google News
England: மிட்செல் மார்ஷ், லபுஸ்சேன் ஆகியோர் அரை சதம் பதிவு செய்தனர். அதிகபட்சமாக கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். (AP)
England: மிட்செல் மார்ஷ், லபுஸ்சேன் ஆகியோர் அரை சதம் பதிவு செய்தனர். அதிகபட்சமாக கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

England: மிட்செல் மார்ஷ், லபுஸ்சேன் ஆகியோர் அரை சதம் பதிவு செய்தனர். அதிகபட்சமாக கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4வது டெஸ்ட் இன்று தொடங்கியது. முதல் 2 டெஸ்ட்களில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.

மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து ஜெயித்தது. மான்செஸ்டரில் நான்காவது டெஸ்ட் இன்று தொடங்கியது. இங்கிலாந்து அணி டாஸ் ஜெயித்து பவுலிங்கை தேர்வு செய்தது.

முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 317 ரன்களில் ஆட்டமிழந்தது ஆஸ்திரேலியா.

மிட்செல் மார்ஷ், லபுஸ்சேன் ஆகியோர் அரை சதம் பதிவு செய்தனர். அதிகபட்சமாக கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

ஸ்டூவர்டு பிராட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டி சாதனை படைத்தார்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது. ஜாக் கிராவ்லி சதம் விளாசினார். மொயீன் அலி அரை சதம் பதிவு செய்து அசத்தியிருக்கிறார். பென் டக்கெட், மொயீன் அலி மட்டும் ஆட்டமிழந்தனர்.

ஜோ ரூட்டுடன் ஜாக் கிராவ்லி களத்தில் உள்ளார். மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை சுருட்டினார்.

ஆஷஸில் கிறிஸ் வோக்ஸ் முதல்முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட் எடுப்பது இது 5வது முறையாகும். அதிலும், அனைத்து 5 விக்கெட்டுகளுமே சொந்த மண்ணில் எடுத்ததுதான்.

ஒட்டுமொத்தமாக 141 விக்கெட்டுகளை டெஸ்டில் அவர் கைப்பற்றியிருக்கிறார். மொத்தம் 22.2 ஓவர்களை வீசிய அவர், அதில் 4 ஓவர்கள் மெய்டனாக வீசினார். 62 ரன்களை விட்டுக் கொடுத்தார். 

மூன்றாவது டெஸ்ட் போட்டியிலேயே இவர், சொந்த மண்ணில் 100 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றி சாதித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி