Eng vs Aus: இன்று 4வது டெஸ்ட்- தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஆஸி., மோதலுக்குத் தயாராகும் பென் ஸ்டோக்ஸ் படை!
Jul 19, 2023, 06:40 AM IST
பரபரப்பான வெற்றியை பெற்ற போதிலும், தொடரில் இன்னும் 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள இங்கிலாந்து, வரவிருக்கும் போட்டியில் ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும்.
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4வது டெஸ்ட் இன்று தொடங்குகிறது. முதல் 2 டெஸ்ட்களில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.
3வது டெஸ்டில் வெற்றி பெற்றிருந்தால் தொடரைக் கைப்பற்றியிருக்கும். கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா அணி தான் கோப்பையைக் கைப்பற்றியது.
இந்த முறை இங்கிலாந்தில் போட்டி நடந்து வருகிறது. லீட்ஸில் உள்ள ஹெட்டிங்லியில் நடந்த மூன்றாவது டெஸ்டில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதல் வெற்றியைப் பெற்றது.
பரபரப்பான வெற்றியை பெற்ற போதிலும், தொடரில் இன்னும் 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள இங்கிலாந்து, வரவிருக்கும் போட்டியில் ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும்.
இந்தப் போட்டியில் ஜெயித்தால் மட்டுமே தொடரை கைப்பற்ற இங்கிலாந்துக்கு வாய்ப்பு கிட்டும். இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸி., அணி அபாரமாக மீண்டு வந்து தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. 2001-ம் ஆண்டுக்குப் பிறகு ஆஷஸ் தொடரை ஆஸி., அணி இங்கிலாந்தில் வெல்லவில்லை என்றாலும், வரவிருக்கும் டெஸ்டில் வெற்றி பெற்றால் அந்த சாதனையை முறியடிக்க முடியும்.
மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராபோர்டில் உள்ள ஆடுகளத்தின் மேற்பரப்பு பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான சூழ்நிலையை வழங்குகிறது. ஏனெனில் பந்து நன்றாக பேட் மீது வருகிறது.
வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவக்கூடிய போதுமான அளவு பவுன்ஸையும் வழங்கும். ஆட்டம் முன்னேறும்போது சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிக்க வாய்ப்புள்ளது.
ஆஸி., அணியில் தொடரில் இதுவரை பெரிய அளவில் சோபிக்காத எடுத்த ஸ்காட் போலண்டை நீக்கிவிட்டுக்கு ஜோஷ் ஹேசில்வுட்டுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை ஆஸ்திரேலிய கேப்டன் உறுதிப்படுத்தினார்.
கேமரூன் கிரீனுக்காக டாட் மர்பியும் நீக்கப்பட்டுள்ளார். லெவனில் மிட்செல் மார்ஷ் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்
பென் டக்கெட், ஜாக் க்ராவ்லி, மொயீன் அலி, ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜொனாதன் பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், மார்க் உட், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்
டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சேன், ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ்(கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹேஸில்வுட்.
டாபிக்ஸ்