The Ashes 3rd Test Preview: புதிய அஸ்திரத்துடன் களமிறங்கும் இங்கிலாந்து.. தொடரை கைப்பற்றும் முனைப்பில் ஆஸி.,
Jul 06, 2023, 07:00 AM IST
கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் ஆகியோரும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளதால் பவுலிங்கில் தாக்குதல் பாணியை இங்கிலாந்து கடைப்பிடிக்கும்.
ஆஷஸ் தொடரின் 3வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
மொத்தம் 5 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2 டெஸ்ட் ஆட்டங்களில் ஜெயித்துள்ளது. 3வது டெஸ்டில் ஜெயித்தால் ஆஸ்திரேலியா தொடரைக் கைப்பற்றும். ஆஷஸ் முந்தைய தொடரில் ஆஸ்திரேலியாதான் சாம்பியன் ஆகியிருக்கிறது.
முந்தைய தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது. தற்போது இங்கிலாந்தில் நடத்தப்பட்டு வருகிறது.
முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடிக்க, பென் டக்கெட் தனது முதல் ஆஷஸ் சதத்தை 2 ரன்கள் வித்தியாசத்தில் இழந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பென் ஸ்டோக்ஸ் முன்னிலை வகித்து அபாரமாக ஆடி சதம் அடித்தார். 155 ரன்களில் அவுட்டானார்.
இரண்டாவது டெஸ்டில் ஏற்பட்ட காயம் காரணமாக நாதன் லயன் ஆஷஸ் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளதால் ஆஸி., அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதேபோல், இங்கிலாந்து தரப்பில் பேட்ஸ்மேன் ஒல்லி போப் காயம் காரணமாக விலகிவிட்டார்.
அதேநேரம், அந்த அணிக்கு காயத்திலிருந்து குணமடைந்து மொயீன் அலி திரும்புகிறார்.
கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் ஆகியோரும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளதால் பவுலிங்கில் தாக்குதல் பாணியை கடைப்பிடிக்கும். இதுவே அந்த அணியின் புதிய அஸ்திரமாக பார்க்கப்படுகிறது.
முதல் இரண்டு நாட்களில் நிலைமைகள் கிரிக்கெட் விளையாட்டிற்கு ஏற்றதாக இருக்கும், வெப்பநிலை 20 டிகிரிக்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் போட்டியின் கடைசி மூன்று நாட்களில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்
ஜாக் கிராலி, பெஸ் டக்கெட், ஹாரி ப்ரூக், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஒல்லி ராபின்சன், ஸ்டூவர்டு பிராட்.
ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்
டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ்(கேப்டன்), டாட் மர்பி, ஜோஷ் ஹேசில்வுட்.
டாபிக்ஸ்