Ashes 2023: போப் விலகல் காரணமாக டாப் ஆர்டரில் தடாலடி மாற்றத்தை கொண்டு வந்த இங்கிலாந்து அணி
Jul 05, 2023, 04:16 PM IST
தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆலி போப் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஆடும் லெவனில் சில தடாலடி மாற்றத்தை கொண்டுவர உள்ளது இங்கிலாந்து அணி.
இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ஆலி போப், தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடியபோது போப் தோள்பட்டையில் சிதைவு ஏற்பட்டது. இதையடுத்து ஸ்கேன் செய்து பார்த்தபோது அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனனர்.
இதன் காரணமாக அவர் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. தற்போது அவரது உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும், இங்கிலாந்து மற்றும் சர்ரே மருத்துவ குழுவினர் அவரை முறையாக புத்துணர்வு முகாமில் ஈடுபடுத்துவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியின் மூன்றாவது பேட்ஸ்மேனாகவும், துணை கேப்டனாகவும் இருந்து வரும் போப் விலகியுள்ள நிலையில் அணியில் சில தடாலடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மிடில் ஆர்டரில் பேட் செய்து வரும் ஹாரி ப்ரூக்கை இனி வரும் போட்டிகளில் மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் டேன் லாரன்ஸை அணியில் ரிசர்வ் பேட்ஸ்மேனாக அணியில் இணைவார் எனவும் தெரிகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்தடுத்து 3 சதம், 3 அரை சதங்கள் விளாசி முதல் டெஸ்ட் தொடரிலிலேயே கவனத்தை ஈர்த்தவர் ஹார் ப்ரூக். இவர் தற்போது முதல் முறையாக ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார்.
இதுவரை ஆஷஸ் தொடரில் இவர் விளையாடியிருக்கும் நான்கு இன்னிங்ஸையும் சேர்த்து 132 ரன்கள் எடுத்துள்ளார். அதேசமயம் மூன்றாவது பேட்ஸ்மேனாக உள்ளூர் கிரிக்கெட்டில் வெறும் 22.3 சராசரி தான் வைத்துள்ளார் ஹாரி ப்ரூக். இந்த சூழ்நிலையில் அவரை மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறக்கும் முக்கிய முடிவை இங்கிலாந்து அணி எடுத்திருப்பதாக தெரிகிறது.
முன்னதாக, லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்கிஸில் இங்கிலாந்து அணி பீல்டிங்கின்போது, ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் லபுஸ்சேன் அடித்த பந்தை டைவ் அடித்து பிடித்தபோது போப்க்கு, தோள்பட்டையில் வலி ஏற்பட்டது. உடனடியாக தனது தோள்பட்டையை நன்கு உலக்கிய அசெளகரியத்தை வெளிப்படுத்தினார்.
இதன்பின்னர் களத்தை விட்டு வெளியேறிய அவர், பீல்டிங் செய்ய வரவில்லை. இரண்டாவகு இன்னிங்ஸில் பீலிடிங் செய்த போப் பந்து த்ரோ செய்வதில் சிரமம் அடைந்ததுடன், அண்டர் ஆர்மில் த்ரோ செய்தார். இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸிலும் தொடர்ந்து பீல்டிங் செய்ய முடியாமல் வெளியேறினார். இரண்டு இன்னிங்ஸிலும் பேட் செய்த போப் முறையே 42 மற்றும் 3 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லே மைதானத்தில் வரும் வியாழக்கிழமை தொடங்குகிறது. இந்த சூழ்நிலையில் போப்க்கான மாற்று வீரர் யாரையும் இங்கிலாந்து அறிவிக்கவில்லை.
ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் தற்போது ஆஸ்திரேலியா அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்