தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  England Squad: 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

England Squad: 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

Manigandan K T HT Tamil

Jul 11, 2023, 05:48 PM IST

google News
The Ashes 2023: மொயீன் அலி அணியில் உள்ள ஒரே சுழற்பந்து வீச்சாளர் என்பதால் பிளேயிங் லெவனில் இடம் பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. (AP)
The Ashes 2023: மொயீன் அலி அணியில் உள்ள ஒரே சுழற்பந்து வீச்சாளர் என்பதால் பிளேயிங் லெவனில் இடம் பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

The Ashes 2023: மொயீன் அலி அணியில் உள்ள ஒரே சுழற்பந்து வீச்சாளர் என்பதால் பிளேயிங் லெவனில் இடம் பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான  பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான 14 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இந்தத் தொடரில் 2-0 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள அந்த அணி, லீட்ஸில் பரபரப்பான த்ரில் வெற்றியைப் பெற்றுள்ளது. மேலும் ஜூலை 19 முதல் ஓல்ட் டிராபோர்டில் ஆஸ்திரேலியாவை சந்திக்கும் போது தொடரை மீண்டும் காப்பாற்றும் முனைப்பில் உள்ளது.

அடுத்த வாரம் ஓல்டு டிராபோர்டில் நடைபெறவுள்ள முக்கியமான நான்காவது டெஸ்டில், ஜானி பேர்ஸ்டோ மீது இங்கிலாந்து நம்பிக்கை வைத்துள்ளது. இதுவரை அவரது ஆட்டத்திறன் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.

மொயீன் அலி அணியில் உள்ள ஒரே சுழற்பந்து வீச்சாளர் என்பதால் பிளேயிங் லெவனில் இடம் பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

ஒல்லி ராபின்சன், மார்க் உட், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோருடன் பிளேயிங் லெவனில் இடம் பெற சில வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு உள்ளது. ஆண்டர்சன் மற்றும் ஜோஷ் டங் ஆகியோரின் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, ஸ்டூவர்ட் பிராட், ஹாரி புரூக், ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், டான் லாரன்ஸ், ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், ஜோ ரூட், ஜோஷ் நாக் டங், கிறிஸ் வோக்ஸ், மார்க் உட்.

முன்னதாக, ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்ஸில் 263 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் 5 விக்கெட்டுகளை எடுத்தார். இதைத்தொடர்ந்து பேட் செய்த இங்கிலாந்து 237 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதைத்தொடர்ந்து, 26 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 224 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து அணிக்கு 251 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த அந்த அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்திருந்தது.

இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு இன்னும் 224 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இன்று 4வது நாள் ஆட்டத்தில் அந்த அணி விளையாடியது.

சிறப்பாக விளையாடிய ஹாரி ப்ரூக் 75 ரன்கள் விளாசினார். கிறிஸ் வோக்ஸ் 32 ரன்கள் பதிவு செய்தார். தொடக்க வீரர் கிராவ்லி 44 ரன்கள் அடித்தார்.

இவ்வாறாக அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

இதன்மூலம், ஆஷஸ் தொடர் 2-1 என்ற கணக்கில் உள்ளது.

நான்காவது டெஸ்ட் போட்டி வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி