தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Eng Vs Aus: ஆஸி., பவுலர்களை அதிரடியில் மிரட்டிய இங்கிலாந்து - முதல் இன்னிங்ஸில் இமாலய ஸ்கோர்! 275 ரன்கள் முன்னிலை

ENG vs AUS: ஆஸி., பவுலர்களை அதிரடியில் மிரட்டிய இங்கிலாந்து - முதல் இன்னிங்ஸில் இமாலய ஸ்கோர்! 275 ரன்கள் முன்னிலை

Jul 21, 2023, 08:58 PM IST

google News
டெஸ்ட் போட்டி போல் இல்லாமல் அதிரடியாக ரன்குவிப்பு அட்டாக் செய்வதில் குறியாக இருந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் 5 பேர் அரைசதமும், ஒருவர் 150+ ஸ்கோரும் அடித்துள்ளனர். இதனால் முதல் இன்னிங்ஸில் இமாலய ஸ்கோர் குவித்து 275 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளனர். (AFP)
டெஸ்ட் போட்டி போல் இல்லாமல் அதிரடியாக ரன்குவிப்பு அட்டாக் செய்வதில் குறியாக இருந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் 5 பேர் அரைசதமும், ஒருவர் 150+ ஸ்கோரும் அடித்துள்ளனர். இதனால் முதல் இன்னிங்ஸில் இமாலய ஸ்கோர் குவித்து 275 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.

டெஸ்ட் போட்டி போல் இல்லாமல் அதிரடியாக ரன்குவிப்பு அட்டாக் செய்வதில் குறியாக இருந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் 5 பேர் அரைசதமும், ஒருவர் 150+ ஸ்கோரும் அடித்துள்ளனர். இதனால் முதல் இன்னிங்ஸில் இமாலய ஸ்கோர் குவித்து 275 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே கடந்த புதன்கிழமை மான்சஸ்டரில் உள்ள ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 317 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

அந்த அணியில் அதிகபட்சமாக மார்னஸ் லபுஸ்சேன், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 51 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து பவுலர்களில் கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து பேட்ஸமேன்கள் அதிரடியாக பேட் செய்து ரன்களை குவித்தனர். இங்கிலாந்து இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 384 ரன்கள் எடுத்தது.

இதைத்தொடர்ந்து இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து இங்கிலாந்து கூடுதலாக 208 ரன்களை குவித்து, 592 ரன்களுக்கு ஆல்அவுட்டாகியுள்ளது. இதன்மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 275 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஸாக் கிராவ்லி 189 ரன்கள் குவித்து அவுட்டானார். இவரை தவிர மொயின் அலி, ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ என 5 பேட்ஸ்மேன்கள் அரை சதம் விளாசினர். அதிரடியாக பேட் செய்த பேர்ஸ்டோ 81 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

ஆஸ்திரேலியா பவுலர்கள் ஜோஷ் ஹசில்வுட் 5 விக்கெட்டுகளை எடுத்தார். பகுதி நேர ஸ்பின்னரான டிராவிஸ் ஹெட 7 ஓவர் வீசி 52 ரன்களை வாரி வழங்கினார்.

இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ள ஆஸ்திரேலியா அணி மூன்றாம் நாள் தேநீர் இடைவேளை வரை 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா தொடக்க பேட்ஸ்மேன் கவாஜா 18 ரன்களில் அவுட்டாகியுள்ளார். இவரது விக்கெட்டை மார்க் வுட் வீழ்த்தியுள்ளார். தற்போதைய நிலையில் ஆஸ்திரேலியா அணி 236 ரன்கள் இங்கிலாந்தை விட பின் தங்கியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி