தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ashes 2023: ஆஸி.,க்கு எதிராக புதிய ஸ்பின் தாக்குதலுடன் களமிறங்க இருக்கும் இங்கிலாந்து அணி

Ashes 2023: ஆஸி.,க்கு எதிராக புதிய ஸ்பின் தாக்குதலுடன் களமிறங்க இருக்கும் இங்கிலாந்து அணி

Jun 24, 2023, 04:17 PM IST

google News
இங்கிலாந்து அணி பிரதான ஸ்பின்னராக இருந்து வந்த மொயின் அலி காயமடைந்த நிலையில் புதிய ஸ்பின்னரை வைத்து லார்ட்ஸில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறது.
இங்கிலாந்து அணி பிரதான ஸ்பின்னராக இருந்து வந்த மொயின் அலி காயமடைந்த நிலையில் புதிய ஸ்பின்னரை வைத்து லார்ட்ஸில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறது.

இங்கிலாந்து அணி பிரதான ஸ்பின்னராக இருந்து வந்த மொயின் அலி காயமடைந்த நிலையில் புதிய ஸ்பின்னரை வைத்து லார்ட்ஸில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறது.

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே வரும் 28ஆம் தேதி தொடங்குகிறது. கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.

இதையடுத்து இங்கிலாந்து அணி இந்த போட்டியில் புதிய ஸ்பின்னரை களமிறக்குகிறது. 18 வயதாகும் இளம் பவுலரான ரேகான் அகமத் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார். லெக் ஸ்பின்னரான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து விளையாடிய டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறக்கப்பட்டார்.

அந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனத்தை ஈர்த்தார். இதைத்தொடர்ந்து தற்போது ஆஷஸ் தொடர் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

இங்கிலாந்து அணியில் பிரதான ஸ்பின்னராக இருந்து வந்த ஜேக் லீச் காயம் காரணமாக ஆஷஸ் தொடரில் பங்கேற்க முடியாமல் போனது. இதனால் அவருக்கு பதிலாக மொயின் அலி அணியின் பிரதான ஸ்பின்னராக சேர்க்கப்பட்டார். தற்போது மொயின் அலிக்கும் விரலில் காயம் ஏற்பட்டதால், அதற்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

எனவே அவருக்கு பதிலாக ரேகான் அகமத் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் மட்டுமில்லாமல், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளிலும் ரேகான் அகமத் விளையாடியுள்ளார்.

ஆஃப் ஸ்பின்னர் வில் ஜேக்ஸ், இடது கை பந்து வீச்சாளர் லியாம் டாவ்சன் என இரண்டு பவுலர்கள் இருக்கும்பட்சத்தில் சர்ப்ரைசாக ரேகான் அகமத் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பிரிமிங்காம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கடைசி நாளில் 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என ஆஸ்திரேலியா அணி முன்னிலை வகிக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி