Duleep Trophy Final: பெஞ்சில் அமர வைக்கப்பட்ட சாய் சுதர்ஷன்.. முதல் நாளில் தள்ளாடிய தெற்கு மண்டலம் அணி
Jul 12, 2023, 08:04 PM IST
Sai Sudharsan: பெங்களூரில் இன்று காலை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் ஜெயித்து மேற்கு மண்டலம் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.
முக்கியத்துவம் வாய்ந்த உள்ளூர் கிரிக்கெட்டான துலீப் டிராபி 2023 தொடரின் இறுதிப் போட்டியில் மேற்கு மண்டலமும், தென் மண்டலமும் மோதி விளையாடி வருகின்றன.
பெங்களூரில் இன்று காலை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் ஜெயித்து மேற்கு மண்டலம் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து, தெற்கு மண்டலம் முதலில் விளையாடியது. முதல் நாள் முடிவில் தெற்கு மண்டலம் 65 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து தள்ளாடி வருகிறது.
கேப்டன் ஹனுமா விஹாரி அரை சதம் விளாசினார். அவர் 63 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். திலக் வர்மா 40 ரன்களிலும், மயங்க் அகர்வால் 28 ரன்களிலும் நடையைக் கட்டினர்.
எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். வாஷிங்டன் சுந்தர், 9 ரன்களுடனும், விஜயகுமார் வைஷாக் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
நாளை காலை 2வது நாள் ஆட்டம் தொடங்குகிறது. டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் கோவை கிங்ஸ் அணியில் கலக்கிய சாய் சுதர்ஷன் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.
அர்ஸன், சிந்தன் கஜா, ஷாம்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
முன்னதாக, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடக்கிறது. காலை 9.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கியது.
பிரியங்க் பஞ்சல் தலைமையிலான மேற்கு மண்டலம் தனது அரையிறுதியை மத்திய மண்டலத்திற்கு எதிராக டிரா செய்தது.
தெற்கு மண்டலம் அணி வடக்கு மண்டலம் அணியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது.
மேற்கு மண்டலம் சார்பில் முதல் இன்னிங்ஸில் 74 ரன்கள் எடுத்த சேத், அதைத் தொடர்ந்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் 278 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உதவியுடன் 133 ரன்கள் குவித்த புஜாரா அதிக நம்பிக்கையுடன் இருப்பார்.
ஹனுமா விஹாரி தலைமையிலான தெற்கு மண்டல அணி அரையிறுதியில் வடக்கு மண்டலத்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த போட்டியில் 76 மற்றும் 54 ரன்கள் எடுத்த மயங்க் அகர்வால் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
ரன் சேஸிங்கில் சாய் கிஷோர் சரியான நேரத்தில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து தென் மண்டலத்தை பைனலுக்கு கொண்டு வர உதவினார்.
டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் கோவை கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடினார் என்பதால் சாய் சுதர்ஷன் தெற்கு மண்டலத்திற்கு பெரும் உதவியாக இருப்பார். இந்தப் போட்டியை bcci.tv இல் கண்டு ரசிக்கலாம்.
டாபிக்ஸ்