தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Duleep Trophy 2023: புஜாரா, சூர்யகுமார் சொதப்பல்.. சாம்பியன் பட்டம் வென்றது தென் மண்டலம்!

Duleep Trophy 2023: புஜாரா, சூர்யகுமார் சொதப்பல்.. சாம்பியன் பட்டம் வென்றது தென் மண்டலம்!

Karthikeyan S HT Tamil

Jul 16, 2023, 04:05 PM IST

google News
Duleep Trophy 2023: துலீப் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் மேற்கு மண்டல அணியை வீழ்த்தி தென் மண்டல அணி சாம்பியன் பட்டம் வென்றது. (BCCI)
Duleep Trophy 2023: துலீப் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் மேற்கு மண்டல அணியை வீழ்த்தி தென் மண்டல அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Duleep Trophy 2023: துலீப் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் மேற்கு மண்டல அணியை வீழ்த்தி தென் மண்டல அணி சாம்பியன் பட்டம் வென்றது.

துலீப் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் மேற்கு மண்டலம் மற்றும் தென் மண்டல அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற பைனலில் டாஸ் வென்று மேற்கு மண்டல அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த தென் மண்டல அணி முதல் இன்னிங்ஸில் 213 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. ஹனுமா விஹாரி 63 ரன்களும், திலக் வர்மா 40 ரன்களும் எடுத்தனர்.

மேற்கு மண்டலம் தரப்பில் ஷம்ஸ் முலானி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து ஆடிய மேற்கு மண்டலம் அணி 51 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. சிறப்பாக பந்துவீசிய காவேரப்பா 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் தென் மண்டல அணி 67 ரன்களுடன் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடங்கியது.

இரண்டாவது இன்னிங்ஸில் தென் மண்டல அணி தரப்பில் விஹாரி 42 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 37 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து அந்த அணி 81.1 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் மேற்கு மண்டல அணி வெற்றிபெற 298 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்பின்னர் களமிறங்கிய மேற்கு மண்டல அணியின் பிரித்வி ஷா 7 ரன்களிலும், ஹர்விக் தேசாய் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவுலியன் திரும்பினர். தொடர்ந்து வந்த புஜாரா 15 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.  மேற்கு மண்டல அணி தனது 2-வது இன்னிங்ஸில் நான்காம் நாளான நேற்று (ஜூலை 15) ஆட்ட நேர முடிவில் 62.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்திருந்தது. மேற்கு மண்டல வெற்றிக்கு 116 ரன்கள் தேவைபட்ட நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது.

கேப்டன் பிரியங் பஞ்சால் சர்ஃபராஸ் கான் ஜோடி வெற்றிக்காக போராடியது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிரியங் பஞ்சால் 92 ரன்களிலும், சர்ஃபராஸ் கான் 48 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர்.

இதன் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தால் மேற்கு மண்டல அணி 222 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. இதனால் தென் மண்டல அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று துலீப் டிராபியை கைப்பற்றியது.  இது தென் மண்டல அணியின் 14-வது துலீப் கோப்பை சாம்பியன் பட்டம் ஆகும். இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசி 8 விக்கெட்டுகளை வீழ்த்திய காவேரப்பாவுக்கு ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி