Cristiano Ronaldo: தப்பு செஞ்ச ரொனால்டோவுக்கு தக்க தண்டனை - சவுதி கால்பந்து கூட்டமைப்பு அதிரடி
Feb 29, 2024, 03:55 PM IST
ரசிகர்களை நோக்கி ஆபாச செய்கையை வெளிப்படுத்திய நட்சத்திர கால்பந்து வீர்ர கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சவுதி புரொ கால்பந்து லீக் தொடரில் அல் நசர் அணிக்காக விளையாடி வருகிறார் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் ரெனால்டோ. இதையடுத்து நேற்று முன் தினம் அல் ஷபாப் அணிக்கு எதிரான முக்கியத்துவம் மிக்க போட்டியில் ரெனால்டோ விளையாடிய அல் நசர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின்போது ரசிகர்களை நோக்கி ஆபாச செய்கையை வெளிப்படுத்தினார் ரொனால்டோ. எதிரணி ரசிகர்கள் சிலர் மற்றொரு புகழ் பெற்ற கால்பந்து வீரரான மெஸ்ஸி மெஸ்ஸி என ரெனால்டோவை நோக்கி குரல் எழுப்பியதால் கடுப்பாகி அந்த ரசிகர்களை நோக்கி மோசமான நடத்தையை வெளிப்படுத்தினார். இதன் விடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அவரது நடத்தை குறித்து பல்வேறு கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்தன.
இந்த விவகாரத்தில் சவுதி கால்பந்து கூட்டமைப்பு தொடரின் ஒழுங்குமுறை மற்றும் நெறிமுறைக் குழு ரொனால்டோ மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி அவர் ஒரு போட்டி விளையாடுவதற்கு தடை விதித்துள்ளது. இதனுடன்ரொனால்டோவுக்கு 10 ஆயிரம் ரியாஸ், சவுதி கால்பந்து கூட்டமைப்பு அபராதமாகவும், 20 ஆயிரம் ரியாஸ் புகார் செலவுக்கான தொகையை ஈடுசெய்ய அல் ஷபாப் அணிக்கும் ரொனால்டோ செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்த தண்டனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அல் ஷபாப் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் அல் நசர் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு அளித்த ரொனால்டோ, ஒரு கோலும் அடித்தார். ரொனால்டோ அடித்த கோல் உள்ளூர் கால்பந்து லீக்கில் அவர் அடித்த 750வது கோல் என மைல்கல் சாதனையைாகவும் அமைந்தது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்