தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Chess World Cup: பிரக்ஞானந்தா தோல்வி! உலக சாம்பியன் ஆனார் கார்ல்சன்

Chess World Cup: பிரக்ஞானந்தா தோல்வி! உலக சாம்பியன் ஆனார் கார்ல்சன்

Aug 24, 2023, 07:41 PM IST

google News
உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனுக்கு கடும் போட்டி அளித்து வந்த இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்ட்ர் பிரக்ஞானந்தா இறுதி போட்டி டைபிரேக்கரில் தோல்வியடைந்தார்.
உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனுக்கு கடும் போட்டி அளித்து வந்த இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்ட்ர் பிரக்ஞானந்தா இறுதி போட்டி டைபிரேக்கரில் தோல்வியடைந்தார்.

உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனுக்கு கடும் போட்டி அளித்து வந்த இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்ட்ர் பிரக்ஞானந்தா இறுதி போட்டி டைபிரேக்கரில் தோல்வியடைந்தார்.

உலகக்கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டிலுள்ள பெக்கு நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரும், ஐந்து முறை உலக சாம்பியனுமான நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சன் - இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மோதினர்.

இருவருக்கும் இடையிலான இறுதிப்போட்டியின் இரண்டு சுற்று போட்டிகளிலும் டிரா ஆன நிலையில்,இன்று டைபிரேக்கர் சுற்று நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய இளம் கிராண்மாஸ்டர் பிரக்ஞானந்தா தோல்வியை தழுவினார்.

டைபிரேக்கரின் முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா தோல்வியை தழுவினார். இதைத்தொடர்ந்து இரண்டாவது கார்ல்சன் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். பிரக்ஞானந்தா காய்களின் நகர்த்தலுக்கு கார்ல்சனை விட சற்று நேரம் எடுத்துக்கொண்டார்.

இதையடுத்து போட்டி டிரா ஆனதாக இருவரும் கை குலுக்கி கொண்ட நிலையில், முதல் சுற்றில் வென்று முன்னிலை பெற்ற கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் மேக்னஸ் கார்ல்சன் 6வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றார்.

18 வயதாகும் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா ரன்அப் ஆகி வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பிடே கேண்டிடேட்ஸ் தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளார். அமெரிக்காவின் ஃபேபியானோ கருணா மூன்றாவது இடத்தை பிடித்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி