Chennaiyin FC: திறமையான defenders-ஐ அணியில் சேர்த்த சென்னையின் எஃப்சி!
Jul 02, 2023, 04:23 PM IST
Indian Super Leauge: 26 வயதான இவரது அனுபவமும், ஆட்டத்தை நன்றாக உணர்ந்து விளையாடும் திறனும் டிஃபென்ஸில் ஸ்திரத்தன்மையை கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) சீசனுக்கு முன்னதாக அணியை வலுப்படுத்த சென்னையின் எஃப்.சி திறமையான டிஃபென்டர்களான அங்கித் முகர்ஜி மற்றும் பிஜய் சேத்ரி ஆகியோரை அணியில் சேர்த்துள்ளது.
38 இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) போட்டிகளில் விளையாடியுள்ள அங்கித், ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணியின் மரினா மச்சான்ஸுடன் இணைகிறார்.
26 வயதான இவரது அனுபவமும், ஆட்டத்தை நன்றாக உணர்ந்து விளையாடும் திறனும் டிஃபென்ஸில் ஸ்திரத்தன்மையை கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
"இரண்டு முறை ஐஎஸ்எல் சாம்பியன் பட்டம் வென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சென்னை அணிக்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர். சென்னையின் எஃப்சி ஜெர்சியை அணிந்து அவர்கள் முன் விளையாட ஆவலாக உள்ளேன்" என்று அங்கித் முகர்ஜி ChennaiynFC.com க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரைச் சேர்ந்த 21 வயதான பிஜய் சேத்ரியுடன் சென்னையின் எஃப்சி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
சிறப்பாக விளையாடக் கூடிய வீரரான இவர், உள்ளூர் கிளப் சென்னை சிட்டி எஃப்சிக்காக விளையாடினார். அசாதாரண டிஃபன்டிங் திறன்கள் மற்றும் கம்போஷரை வெளிப்படுத்துவார்.
இதுகுறித்து, பிஜய் சேத்ரியும் கூறுகையில்,
"சென்னயின் எஃப்சி குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
உற்சாகமாக இருக்கிறேன். சென்னையின் எஃப்சி கிளப்புக்கு உதவ காத்திருக்கிறேன். கிளப்பின் வளர்ச்சிக்கு எனது 100% பங்களிப்பை வழங்குவேன். நான் சென்னை ரசிகர்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்" என்றார்.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்), இந்திய கால்பந்து அரங்கில் முத்திரை பதித்து வருகிறது. பல இளம் திறமையாளர்களை அடையாளம் காட்டி வருகிறது. அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (ஏ.ஐ.எஃப்.எஃப்) மற்றும் வணிக பங்குதாரர் கால்பந்து விளையாட்டு மேம்பாட்டு லிமிடெட் (எஃப்.எஸ்.டி.எல்) ஆகியவற்றால் நிர்வகிக்கப்படும் இந்த கால்பந்து லீக் தற்போது 12 கிளப் அணிகளைக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்