BWF World Championships 2023: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிராக் ஷெட்டி - ராங்கி ரெட்டி
Aug 24, 2023, 04:43 PM IST
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்திய நட்சத்திர ஜோடிகளான சாத்வித் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். மற்றொரு ஜோடியான திரிஷா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஆகியோர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
பிடபிள்யூஎஃப் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது. 28வது பிடபிள்யுஎஃப் பேட்மிண்டன் தொடரான இந்த போட்டிகள் ஆகஸ்ட் 21 முதல் 27 வரை அந்நாட்டில் உள்ள கோபன்ஹேகன் நகரில் ராயல் அரேனா மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த தொடரில் இந்தியாவின் நட்சத்திர ஜோடிகளான சாத்வித் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஜோடி, ஆஸ்திரேலியாவின் கென்னத் ஸீ ஹூய் ஸூ மற்றும் மிங் ஸூவங் லிம் ஜோடியை ஆஃப் 32 சுற்று போட்டியில் வீழ்த்தினர்.
சுமார் 30 நிமிடம் நடைபெற்ற இந்த போட்டியில் 21-16, 21-9 என்ற நேர் செட்களில் இந்தியா ஜோடி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த ஆண்டில் உச்சகட்ட பார்மில் இருக்கும் சாத்வித் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஜோடி தற்போது வரை 4 கோப்பைகளை வென்றுள்ளது. இவர்கள் தங்களது அடுத்த போட்டியில் வலிமையான இந்தோனேஷியா ஜோடியான லியோ ராலி கார்னேன்டோ - டேனியன் மார்டின் ஆகியோரை எதிர்கொள்கிறார்கள். இந்த போட்டியில் இந்தியர்கள் வெற்றி பெற்றால் காலிறுதிக்கு தகுதி பெறுவார்கள்.
மகளிருக்கான இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் திரிஷா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சீனா தைப்பேயின் சாங் சிங் ஹூயி மற்றும் யாங் சிங் துன் ஜோடியாக 21-18, 21-10 என நேர் செட்களில் வீழ்த்தினர்.
38 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய ஜோடி, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்டார் வீரரான எச்எஸ் பிரனாய், லக்ஷயா சென் ஆகியோர் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் விளையாடவுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்