Australia Open: 500வது வெற்றியை பதிவு செய்த இந்திய வீரர் போப்பண்ணா! எப்டனுடன் இணைந்து இரட்டையர் சுற்றில் வெற்றி
Jan 19, 2024, 05:30 PM IST
ஆண்கள் இரட்டையர் பிரிவில் எப்டனுடன் இணைந்து விளையாடி வரும் இரண்டாவது சீட் வீரராக இருந்து வரும் இந்திய வீரர் ரோஹன் போப்பண்ணா தனது கேரியரில் 500வது வெற்றியை பதிவு செய்துள்ளார்.
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் 43 வயதாகும் இந்தியாவின் மூத்த வீரரான ரோஹன் போப்பண்ணாவும் விளையாடி வருகிறார். இரண்டாம் சீட் வீரரான போப்பண்ணா கலப்பு இரட்டையர் பிரிவில் வழக்கமாக இணைந்து விளையாடும் ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ எப்டனுடன் ஜோடி சேர்ந்து, ஆஸ்திரேலியாவின் ஜேமஸ் டக்வோர்த், தென் ஆப்பரிக்காவின் மார்க் போல்மேன்ஸ் ஜோடியை எதிர்கொண்டனர்.
மிகவும் பரபரப்பாக சென்ற இந்த போட்டியானது இரண்டு மணி நேரம் 9 நிமிடங்கல் வரை நீடித்தது. இறுதியில் 7-6(5), 4-6, 7-6(10-2) என்ற செட் கணக்கில் போப்பண்ணா ஜோடி வெற்றி பெற்றது. இந்த வெற்றி போப்பண்ணாவுக்கு 500வது வெற்றியாக அமைந்தது.
கடந்த 2023 தொடரில் போப்பண்ணா - எப்டன் ஜோடி அரையிறுதியுடன் வெளியேறியது. இந்த முறை இந்த ஜோடி வெற்றியுடன் தொடரை தொடங்கியுள்ளது.
இதுவரை 24 முறை பல்வேறு நாடுகளில் சுற்றுப்ப்யணம் செய்திருக்கும் போப்பண்ணா, தனது முதல் இரட்டையர் கோப்பைக்கான தேடலில் இருந்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்