தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Best State Sports Promo Award: ‘விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம்’-விருது வென்றது தமிழ்நாடு

Best State Sports Promo Award: ‘விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம்’-விருது வென்றது தமிழ்நாடு

Manigandan K T HT Tamil

Dec 03, 2023, 04:07 PM IST

google News
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பாக 2023க்கான 'விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம்' என்ற பட்டத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெற்றிருப்பதை குறித்து ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) சார்பில் 2023-க்கான ‘விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம்’ விருது வழக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது, ‘'இந்த அங்கீகாரம், தமிழகத்தில் விளையாட்டு சாம்பியன்களை உருவாக்கி வளர்ப்பதற்கு நமது திராவிட மாடல் அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஒரு சான்றாகும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முயற்சிகளை அங்கீகரித்ததற்காக இந்திய தொழில் கூட்டமைப்புக்கு (CII) நன்றி தெரிவிக்கிறேன்.'’ என குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்திய தொழில் கூட்டமைப்பின் தொழில் மற்றும் விளையாட்டு துறை சார்ந்த ஸ்கோர்க்கார்ட் (Scorecard) கருத்தரங்கத்தின் 8-வது பதிப்பு டெல்லியில் வருகின்ற டிசம்பர் 4-ம் தேதி ஹயாத் ரெஜென்சியில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் என்ற விருதை வழங்கவுள்ளார்கள்.

இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) என்பது இந்தியாவின் முதன்மையான வணிக கூட்டமைப்பாகவும், இதில் நாடு முழுவதும் 9,000 உறுப்பினர்கள் மற்றும் 300 தேசிய மற்றும் சர்வதேச பெருநிறுவன பங்குதாரர்கள் உள்ளனர். இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) இந்தியாவின் தொழில் மற்றும் வணிக சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மேலும் அரசுடன் இணைத்து பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கும் கொள்கை வடிவமைப்பு என பல்வேறு வகையில் இணைத்து செயல்பட்டுவருகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாநிலத்தில் விளையாட்டு வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றுகிறது, சமூகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து அனைவரும் பங்கேற்பதை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகளை செயல்படுத்துகிறது. குறிப்பாக முக்கிய விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதிலும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், விளையாட்டு வீரர்களின் நலன் காப்பதிலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி