தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ben Stokes: டெஸ்ட் கிரிக்கெட்டில் எம்எஸ் தோனியின் தனித்துவமான சாதனை - முறியடித்த பென் ஸ்டோக்ஸ்

Ben Stokes: டெஸ்ட் கிரிக்கெட்டில் எம்எஸ் தோனியின் தனித்துவமான சாதனை - முறியடித்த பென் ஸ்டோக்ஸ்

Jul 11, 2023, 06:46 PM IST

google News
டெஸ்ட் கிரிக்கெட்டில் எம்எஸ் தோனி படைத்த தனித்துவமான சாதனையை முறியடித்துள்ளார் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை வென்றதன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார்.

ஒரு நாள், டி20 கிரிக்கெட்டை போன்று டெஸ்ட் போட்டிகளிலும் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. ஒரு வீரராக இல்லாமல் கேப்டனாக சில தனித்துவமான சாதனைகளை செய்துள்ளார்.

அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 250+ ரன்களை அதிகமாக சேஸ் செய்த கேப்டன் என்ற பெருமைய பெற்றவராக இருந்தார் தோனி. அவர் 60 டெஸ்ட் போட்டிகளில் நான்கு முறை வெற்றிகரமாக சேஸ் செய்துள்ளார்.

இதையடுத்து 5 டெஸ்ட் போட்டிகளில் 250+ ஸ்கோர்களை சேஸ் செய்து இந்த லிஸ்டில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ். ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை வென்றதன் மூலமாக அவர் இந்த சாதனை புரிந்துள்ளார்.

அத்துடன் 17 போட்டிகளில் மட்டுமே கேப்டனாக செயல்பட்டு ஸ்டோக்ஸ் இந்த சாதனையை புரிந்திருப்பது மற்றொரு சிறப்பு அம்சமாக அமைந்துள்ளது. இந்த லிஸ்டில் 3வது இடத்தில் மூன்று 250+ ஸ்கோரை சேஸ் செய்து ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் பிரெயன் லாரா ஆகியோர் உள்ளனர்.

கடந்த வாரம் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 251 ரன்கள் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 2 வெற்றியும், இங்கிலாந்து ஒரு வெற்றியும் பெற்றுள்ளது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே நான்காவது டெஸ்ட் போட்டி வரும் 19ஆம் தேதி மான்சஸ்டர் மைதானத்தில் நடைபெறுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி