தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Bcci: கம்பேக் கொடுக்க தயாராகும் முக்கிய வீரர்கள் - பக்கா பிளான் போடும் பிசிசிஐ

BCCI: கம்பேக் கொடுக்க தயாராகும் முக்கிய வீரர்கள் - பக்கா பிளான் போடும் பிசிசிஐ

Jul 22, 2023, 02:38 PM IST

google News
இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் புத்துணர்வு முகாமின் இறுதிகட்டத்தில் உள்ளார்கள் எனவும், வலைப்பயிற்சியில் முழுமையான தீவிரத்துடன் பவுலிங் செய்து வருவதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் புத்துணர்வு முகாமின் இறுதிகட்டத்தில் உள்ளார்கள் எனவும், வலைப்பயிற்சியில் முழுமையான தீவிரத்துடன் பவுலிங் செய்து வருவதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் புத்துணர்வு முகாமின் இறுதிகட்டத்தில் உள்ளார்கள் எனவும், வலைப்பயிற்சியில் முழுமையான தீவிரத்துடன் பவுலிங் செய்து வருவதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களாக திகழும் கேஎல் ராகுல், ஜஸ்ப்ரீத் பும்ரா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் ஆகியோர் காயத்தால் அவதியுற்று வருகின்றனர். அதேபோல் இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவும் காயமடைந்துள்ளார்.

இதையடுத்து காயமடைந்த வீரர்கள் அனைவரும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் புத்துணர்வு முகாமில் பங்கேற்று வருகின்றனர். அங்கு அவரகளுக்கு உடல்நலம், மனநலம் சார்ந்த பயிற்சிகள் அனைத்தும் அளிக்கப்படுகின்றன.

இதையடுத்து காயமடைந்த பவுலர்களான பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் நன்கு குணமடைந்து பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வலைப்பயிற்சியின் போது முழுமையான தீவிரத்துடன் இருவரும் பந்து வீசி வருகிறார்களாம். தற்போது புத்துணர்வு முகாமில் இறுதிகட்டத்தில் இருந்து வரும் இருவரும் தேசிய கிரிக்கெட் அகாடமி ஏற்பாடு செய்யும் பயிற்சி போட்டிகளில் விளையாடவுள்ளனராம்.

இந்த பவுலர்களின் உடற்தகுதி குறித்து பிசிசிஐ மருத்துவ குழு திருப்தி அடைந்திருப்பதாகவும், பயிற்சி போட்டியில் இவர்களின் செயல்பாட்டை பார்த்த பின்னர், போட்டி ஆட்டங்களில் பங்கேற்பது குறித்து இறுதி முடிவு எடுக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதேபோல் பேட்ஸ்மேன்களான கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் பேட்டிங் பயிற்சிக்கு திரும்பியுள்ளனராம். தங்களது வலிமை மற்றும் பிட்னஸை வெளிப்படுத்தும் விதமாக அவர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனராம். இவர்களின் செயல்பாடுகளில் திருப்தி அடைந்துள்ள பிசிசிஐ மருத்துவ குழு, வரும் நாள்களில் அவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

விபத்தில் சிக்கி உயிர்பிழைத்து மறுபிறவி எடுத்திருக்கும் ரிஷப் பண்ட், புத்துணர்வு முகாமில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறார். தற்போது அவர் நடப்பதிலும், ஓடுவதில் எந்த பிரச்னையும் சந்திக்காத நிலையில் கீப்பர் மற்றும் பேட்டிங் பயிற்சியும் மேற்கொள்ள தொடங்கியுள்ளராம்.

குறிப்பாக பிட்னஸ், வலிமை, நெகிழ்வுதன்மை, ஓட்டம் ஆகிய பயிற்சிகளை பண்ட் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவரை அதை தீவிரமாக செய்து வருகிறாராம்.

காயமடைந்த இந்த வீரர்களின் கம்பேக் எதிர்வரும் உலக கோப்பை ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி பலப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி