தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asia Cup 2023: ஆசிய கோப்பை போட்டி அட்டவணை வெளியீடு: இந்தியா-பாக்., செப்.2 இலங்கையில் மோதல்

Asia Cup 2023: ஆசிய கோப்பை போட்டி அட்டவணை வெளியீடு: இந்தியா-பாக்., செப்.2 இலங்கையில் மோதல்

Manigandan K T HT Tamil

Jul 19, 2023, 07:57 PM IST

google News
செப்டம்பர் 2ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி. இலங்கையின் கண்டியில் இப்போட்டி நடைபெறவுள்ளது. (@JayShah)
செப்டம்பர் 2ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி. இலங்கையின் கண்டியில் இப்போட்டி நடைபெறவுள்ளது.

செப்டம்பர் 2ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி. இலங்கையின் கண்டியில் இப்போட்டி நடைபெறவுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் நடத்துகிறது. ஆனால், அந்நாட்டுக்கு சென்று விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்து விட்டது.

இதனால், பொது இடத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் முன்வந்தார்.

அதற்கு பிசிசிஐ இணங்கியது. ஆனால், புதிதாக வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் முரண்டு பிடித்தார்.

இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முடிவில் பாகிஸ்தான் அணி பொதுவான இடத்தில் விளையாட வர சம்மதித்தது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலின்போதே போட்டி அட்டவணை வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், பிசிசிஐ செயலர் ஜெய் ஷா இன்று போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளார்.

செப்டம்பர் 2ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி. இலங்கையின் கண்டியில் இப்போட்டி நடைபெறவுள்ளது.

முதல் போட்டி பாகிஸ்தான்-நேபாள் இடையே பாகிஸ்தானின் முல்தான் நகரில் நடைபெறவுள்ளது. இப்போட்டி ஆகஸ்ட் 30ம் தேதி நடக்கிறது.

அடுத்த ஆகஸ்ட் 31ம் தேதி வங்கதேசம், இலங்கை அணிகள் மோதும் போட்டி கண்டியில் நடக்கிறது.

செப்டம்பர் 3ம் தேதி வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதும் போட்டி லாகூரிலும், இந்தியா-நேபாளம் மோதும் போட்டி கண்டியில் செப்டம்பர் 4ம் தேதியும் நடக்கவுள்ளது.

ஆப்கானிஸ்தான்-இலங்கை மோதும் போட்டி செப்டம்பர் 5ம் தேதி லாகூரில் நடக்கவுள்ளது.

இதுவரை குரூப் பிரிவு ஆட்டங்கள் ஆகும். சூப்பர் ஃபோர் சுற்று ஆட்டங்கள் செப்டம்பர் 6, 9, 10, 12, 14, 15 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளன.

செப்டம்பர் 6ம் தேதி நடக்கும் போட்டி மட்டும், லாகூரில் நடக்கிறது. எஞ்சிய அனைத்து போட்டிகளும் பைனல் உள்பட கொழும்பில் நடக்கிறது.

செப்டம்பர் 17ம் தேதி கொழும்பில் நடக்கும் பைனலில் சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மோதும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி