BCCI: வெஸ்ட்இண்டீஸ் தொடர் - இந்தியா டெஸ்ட், ஒரு நாள் அணி அறிவிப்பு! இரண்டு ஐபிஎல் ஸ்டார் வீரர்களுக்கு வாய்ப்பு
Jun 23, 2023, 03:39 PM IST
பேட்டிங்கில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சத்தேஷ்வர் புஜாரா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் கலக்கிய இளம் பேட்ஸ்மேனான யஷஸ்வி ஜெய்ஸ்வால்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அணி வரும் ஜூலை - ஆகஸ்ட் மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 13 வரை 2 டெஸ்ட், 3 ஒரு நாள், 5 டி20 என மொத்தம் 10 போட்டிகளில் பங்கேற்கிறது.
இதையடுத்து இந்த தொடரில் விளையாட இருக்கும் இந்தியா டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. டெஸ்ட் அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்து வந்த சத்தேஷ்வர் புஜாரா பார்ம் இல்லாமல் இருந்து வருவதுடன் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் மாற்று வேகப்பந்து வீச்சாளராக அணியில் சேர்க்கப்பட்ட உமேஷ் யாதவும் நீக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் அதிரடி பேட்டிங்கால் கலக்கிய இளம் பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்வாட் உள்ளூர் கிரிக்கெட் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் முகேஷ் குமார் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கம்பேக் கொடுத்திருக்கும் ரஹானே, துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா ஒரு நாள் அணியில் சிஎஸ்கே ஸ்டார் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், உம்ரான் மாலிக், முகேஷ் குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கும் இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் ஷர்மா (கேப்டன்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்கியா ரஹானே (துணை கேப்டன்), கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்ஷர் படேல், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெயதேவ் உனத்கட், நவதீப் சைனி
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கும் இந்திய ஒரு நாள் அணி: ரோஹித் ஷர்மா (கேப்டன்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், சஞ்சு சாம்சன், (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ஷர்துல் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், யஸ்வேந்திரா சஹால், குல்தீப் யாதவ், ஜெயதேவ் உனத்கட், முகமது சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்
இந்திய டெஸ்ட் அணியில் ருதுராஜ் கெய்க்வாட், யஸஷ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்