தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ban Vs Eng T20i:உலக சாம்பியன் இங்கிலாந்தை தட்டி தூக்கிய வங்கதேசம்

Ban vs Eng T20I:உலக சாம்பியன் இங்கிலாந்தை தட்டி தூக்கிய வங்கதேசம்

Mar 13, 2023, 10:31 AM IST

இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை வங்கதேசம் கைபற்றியுள்ளது. வங்கதேசத்தின் ஆல்ரவுண்டர் மெஹ்டி ஹாசன் கேரியர் பெஸ்ட் பந்து வீச்சை வீசியுள்ளார்.

வங்கதேசம் சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றது.

ட்ரெண்டிங் செய்திகள்

Federation Cup 2024: ஃபெடரேஷன் கோப்பை 2024 போட்டியில் ஈட்டி எறிதல் வீரர்கள் நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா பங்கேற்பு

FIFA WC 26 qualifiers: இரண்டாவது பட்டியலை வெளியிட்டார் இந்திய தலைமைப் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்

Madrid Open Tennis: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி: முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ரூப்லேவ்

ISL 2024 Final: ஐபிஎல்-இல் விட்டதை ஐஎஸ்எல்-இல் பிடித்த மும்பை! இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்

இதைத்தொடர்ந்து நடைபெற்று வரும் டி20 தொடரில், சட்டோகிராமில் நடைபெற்ற முதல் போட்டியில் வங்கதேசம் அணி வெற்றி பெற்றது.

இதையடுத்து இரண்டாவது டி20 போட்டி மிர்பூரில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 117 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இது வங்கதேசம் அணிக்கு எதிராக இங்கிலாந்தின் குறைந்தபட்ச ஸ்கோராக அமைந்தது.

பின்னர் சேஸிங்கில் களமிறங்கிய வங்கதேசம் அணி 18.5 ஓவரில் 120 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டி20 உலக சாம்பியனான இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த வெற்றியை ருசித்துள்ளது. முதல் போட்டியில் விளையாடிய ஷாமிம் ஹுசைனுக்கு பதிலாக சேர்க்கப்பட்ட ஆல்ரவுண்டர் மெஹ்டி ஹாசன், 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் தனது கேரியர் பெஸ்ட் பெளலிங்கை பதிவு செய்தார்.

அத்துடன் பேட்டிங்கிலும் 14 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து தனது பார்மை தொடர்ந்து அணிக்கு வெற்றியை தேடிதர காரணமாக அமைந்தார்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 வெற்றிகள் பெற்று வங்கதேசம் அணி கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி மிர்பூரில் நாளை நடைபெறுகிறது.

டாபிக்ஸ்