தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Mehidy Hasan Miraz : ‘ஒருவேளை என்னை பைத்தியம் எனலாம்’ வங்க வீரர் மெஹடி பேட்டி!

Mehidy Hasan Miraz : ‘ஒருவேளை என்னை பைத்தியம் எனலாம்’ வங்க வீரர் மெஹடி பேட்டி!

Dec 05, 2022, 09:12 AM IST

google News
‘‘நான் ஆட்டத்தை வெல்வதில் மட்டுமே கவனம் செலுத்தினேன். என்னால் இதைச் செய்ய முடியும் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். எபடோட்டுடன் 15 ரன்களும், ஹசன் மஹ்மூத்துடன் 20 ரன்களும், மீதி 15-20 ரன்களை முஸ்தாபிஸுடனும் அடிக்க நினைத்தேன்’’ -மெஹடி

வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடன் முதல் ஒருநாள் போட்டியில் நேற்று விளையாடியது. முதல் இன்னிங்ஸில் 186 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணியை, அதன் பின் இறுக்கி பிடித்தது.

வங்கதேசம் 9 விக்கெட்டுகளை இழந்த போது, 51 ரன்கள் எடுக்க வேண்டி கட்டாயம் இருந்தது. அப்போது ஜோடி சேர்ந்த மெஹடி ஹசன் மற்றும் முஸ்தாபிசரின் கூட்டணி, இந்தியாவின் வெற்றியை பறித்தது.

குறிப்பாக மெஹடியின் அதிரடி ஆட்டம், பங்களாதேஷ் வெற்றி பெற காரணமானது. யாரும் எதிர்பாராத நேரத்தில் ஆபத்பந்தவன் போல விளையாடி, அவரது அணிக்கு வெற்றியை தேடித்தந்தார் மெஹடி. இது தொடர்பாக, மெஹடி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

‘‘நான் இதை சொல்வதால், ஒருவேளை மக்கள் என்னை பைத்தியம் என்று கூட அழைக்கலாம். ஆனால் நாங்கள் வெற்றி பெற முடியும் என்ற நேர்மையான நம்பிக்கை எனக்கு இருந்தது. நான் ஆட்டத்தை வெல்வதில் மட்டுமே கவனம் செலுத்தினேன். என்னால் இதைச் செய்ய முடியும் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். எபடோட்டுடன் 15 ரன்களும், ஹசன் மஹ்மூத்துடன் 20 ரன்களும், மீதி 15-20 ரன்களை முஸ்தாபிஸுடனும் அடிக்க நினைத்தேன்.

ஆனால் இரண்டு பேரின் விக்கெட்டுகளும் விரைவு விழுந்தது. கடைசி விக்கெட் மீதமிருந்த நிலையில், இறக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. நான் சில ரிஸ்க் எடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அப்போது முஸ்தாபிஸின் வார்த்தைகள் உண்மையில் எனக்கு பலமாக இருந்தன. அது எனக்கு அதிக நம்பிக்கையை அளித்தது.

முஸ்தாபிஸூர் என்னை மிகவும் ஆதரித்தார். அதில் ஒன்று அவரது தன்னம்பிக்கை. அவர் என்னிடம் தொடர்ந்து சொன்னார், 'நீங்கள் என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நான் பந்தை ஆபத்து வராமல தடுத்துவிடுவேன். என் உடலில் பந்துகளை மறைத்தாவது அவுட் ஆகாமல் பார்த்துக் கொள்வேன் என்று நம்பிக்கையாக என்னிடத்தில் கூறினார்.

நாங்கள் தோற்றுவிடுவோம் அல்லது மீதமுள்ள ரன்களைப் பெற முடியாது என்று நான் நினைத்திருந்தால், அது இப்படி நடந்திருக்காது. எப்படியாவது இதை செய்து முடிக்க வேண்டும் என்கிற நிலையில் இருந்தோம். அடிக்க முயன்று வெளியேறுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. எங்களுக்கு 50 ரன்கள் தேவைப்பட்டபோது, ​​நான் வாய்ப்புகளைப் பயன்படுத்தினேன். அது நடந்தது,’’

என்று மெஹடி கூறியுள்ளார்.

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி