தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Nz Vs Pak, T20 Semifinal:chokersஆன நியூசிலாந்து!3வது முறையாக பைனலில் பாகிஸ்தான்

Nz vs Pak, T20 semifinal:Chokersஆன நியூசிலாந்து!3வது முறையாக பைனலில் பாகிஸ்தான்

Nov 09, 2022, 07:39 PM IST

google News
ஓர் அணியாக சரியான நேரத்தில் விஸ்வரூபம் எடுத்த பாகிஸ்தான் மூன்றாவது முறையாக டி20 பைனலில் விளையாடவுள்ளது. பேட்டிங்கில் இதுவரை சோபிக்காமல் இருந்த பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஜோடி நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் அரைசதம் விளாசி சரியான நேரத்தில் பார்முக்கு திரும்பியுள்ளனர்.
ஓர் அணியாக சரியான நேரத்தில் விஸ்வரூபம் எடுத்த பாகிஸ்தான் மூன்றாவது முறையாக டி20 பைனலில் விளையாடவுள்ளது. பேட்டிங்கில் இதுவரை சோபிக்காமல் இருந்த பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஜோடி நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் அரைசதம் விளாசி சரியான நேரத்தில் பார்முக்கு திரும்பியுள்ளனர்.

ஓர் அணியாக சரியான நேரத்தில் விஸ்வரூபம் எடுத்த பாகிஸ்தான் மூன்றாவது முறையாக டி20 பைனலில் விளையாடவுள்ளது. பேட்டிங்கில் இதுவரை சோபிக்காமல் இருந்த பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஜோடி நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் அரைசதம் விளாசி சரியான நேரத்தில் பார்முக்கு திரும்பியுள்ளனர்.

Chokers என்று இதுவரை தென்ஆப்பரிக்கா அணியைதான் அழைத்து வரப்பட்டது. ஆனால், நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பலம் வாய்ந்த அணியாக வலம் வந்து சூப்பர் 12 சுற்றில் சிறப்பாக செயல்பட்டு, கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து கடைசியாக அரையிறுதியில் பாகிஸ்தானிடம் வீழ்ந்து தொடரை விட்டு வெளியேறியுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக நாக்அவுட் போட்டிகளில் நான்காவது முறையாக தோல்வியை தழுவியதுடன், 2007 முதல் தற்போது வரை உலகக் கோப்பைக்கான கனவு பலிக்காமலேயே உள்ளது.

சிட்னியில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து பாகிஸ்தான் பெளலர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ரன்குவிப்பில் ஈடுபட தடுமாறியது. தொடக்க பேட்ஸ்மேன்கள் ஆலன் 4, கான்வே 21 என பெரிதாக ஸ்கோர் அடிக்காத நிலையில் பார்மில் உள்ள பேட்ஸ்மேனான பிளிப்ஸ் 6 என வெளியேறினார். விக்ரெட் சரிவை தடுக்கும் விதமாக கேப்டன் வில்லியம்சன் தனது பாணியில் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

மறுபக்கம் டேரில் மிட்செல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த அணியில் ஸ்கோர் மெல்ல உயர தொடங்கியது. இந்த தொடர் முழுக்கவே ஒரு நாள் இன்னிங்ஸ் போல் ஆடி வந்த வில்லியம்சன்

நாக்அவுட் ஆட்டமான இன்றைய போட்டியிலும் தொடர்ந்தார்.

42 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து அவர் அவுட்டானார். மிட்செல் 35 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருக்க, 20 ஓவரில் 152 ரன்களை நியூசிலாந்து அணி எடுத்தது.

பார் ஸ்கோரை விட 10 முதல் 20 ரன்கள் குறைவான ஸ்கோராக அமைந்த நிலையில், சேஸிங்கில் களமிறங்கியது பாகிஸ்தான் அணி. சூப்பர் 12 சுற்றில் ஒரு போட்டியிலும் ஜொலிக்காத பாகிஸ்தான் ஓபனிங் பேட்ஸ்மேன்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் இன்றைய போட்டியில் பார்முக்கு திரும்பினர்.

இந்த தொடர் முழுவதும் பாகிஸ்தான் அணியை பேட்டிங்கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களே காப்பாற்றி வந்த நிலையில், சரியான நேரத்தில் இவர்கள் இருவரும் பார்முக்கு திரும்பியதோடு முதல் வக்கெட்டுக்கு 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இவர்கள் விக்கெட்டை வீழ்த்த நியூசிலாந்து பெளலர்கள் மேற்கொண்ட முயற்சிகளும் எதுவும் பலன் அளிக்கவில்லை. 19.1 ஓவரில் 153 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பை பைனலுக்கு தகுதி பெற்றது.

முகமது ரிஸ்வான் 57, பாபர் அசாம் 53 ரன்களை எடுத்தனர். அணியின் வெற்றிக்கு வித்திடும் விதமாக சிறப்பான இன்னிங்ஸை வெளிப்படுத்திய ரிஸ்வான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆரம்பத்திலேயே இரண்டு தோல்விகளை பெற்று அரையிறுதி வாய்ப்பை கடினமாக்கி கொண்ட பாகிஸ்தான், கடைசியாக கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து தற்போது 2007, 2009க்கு பிறகு மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணியில் ஓபனிங் பேட்டிங் குறையாக இருந்து வந்த நிலையில், தற்போது இன்றைய போட்டியில் அதுவும் சிறப்பாக அமைந்துள்ள நிலையில், பலம் வாய்ந்த அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

2007 முதல் தொடர்ந்து ஐசிசி போட்டிகளின் நாக்அவுட் போட்டிகளுக்கு தகுதி பெற்று வரும் நியூசிலாந்து 15 ஆண்டுகளாக சாம்பியன் கோப்பை வெல்ல வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற முடியாமல் தவித்து வருகிறது. 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி