தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Jasprit Bumrah: ‘காலம் பதில் சொல்லும்’-பும்ரா குறித்து ஆஸி., முன்னாள் பவுலர் கருத்து

Jasprit Bumrah: ‘காலம் பதில் சொல்லும்’-பும்ரா குறித்து ஆஸி., முன்னாள் பவுலர் கருத்து

Manigandan K T HT Tamil

Aug 08, 2023, 12:42 PM IST

google News
அயர்லாந்து சுற்றுப் பயணம் செல்லும் இந்திய அணியின் கேப்டனாக ஜஸ்ப்ரீத் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டார்.

இந்திய பவுலர் ஜஸ்பிரீத் பும்ரா முழு உள்நாட்டு சீசனையும் தவறவிட்டாலும் இந்திய அணிக்காக உடனடி தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் தெரிவித்தார்.

ஐசிசி போட்டிக்கு முன்னதாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனது ஃபார்மை மீட்டெடுத்தால் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2023 ஐசிசி உலகக் கோப்பை இறுதிச்சுற்றுக்குள் எளிதாக நுழையும்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பும்ரா குறித்து கூறியதாவது:

காயம் எப்படி இருக்கிறது, அவர் வைத்திருக்கும் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றைப் பொறுத்துதான் அவரது கிரிக்கெட் பயணம் இருக்கும். அவர் தரமான பந்துவீச்சாளர் என்பதால் அவர் நன்றாக இருப்பார் என்று நினைக்கிறேன். ஓய்வில் இருந்தது அவருக்கு உதவியிருக்கும் என நம்புகிறேன். வேகப்பந்து வீச்சாளர்கள் தங்கள் உடலில் வலிமையை மீண்டும் பெற அந்த ஓய்வும் நேரமும் தேவை. பும்ரா முழுமையாக உடல்நிலை தேறி வந்துவிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அவர் பந்துவீசுவதை சமீப காலமாக நான் பார்க்கவில்லை. அதற்கு காலம் பதில் சொல்லும். எனவே, அவர் தனது முந்தைய இடத்திற்குத் திரும்புவதை நான் உன்னிப்பாகக் கவனிப்பேன்" என்றார் மெக்ராத்.

கிளென் மெக்ராத் 949 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியாவுக்கு எடுத்திருக்கிறார்.

அயர்லாந்து சுற்றுப் பயணம் செல்லும் இந்திய அணியின் கேப்டனாக ஜஸ்ப்ரீத் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, காயம் காரணமாக நீண்ட பிரேக் எடுத்திருக்கிறார்.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை ஜஸ்பிரீத் பும்ரா வழிநடத்துகிறார். இதற்கிடையில், 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தவுள்ள ருதுராஜ் கெய்க்வாட் புதிய துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அயர்லாந்து சுற்றுப் பயணத்துக்கு செல்லவுள்ள இந்திய அணி

ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, டபிள்யூ சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ் கான்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி