தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Australia 1st Innings: ஸ்மித்துக்கு இது எத்தனையாவது சதம் தெரியுமா?-முதல் இன்னிங்ஸில் பொளந்து கட்டிய ஆஸி.,

Australia 1st Innings: ஸ்மித்துக்கு இது எத்தனையாவது சதம் தெரியுமா?-முதல் இன்னிங்ஸில் பொளந்து கட்டிய ஆஸி.,

Manigandan K T HT Tamil

Jun 29, 2023, 06:10 PM IST

google News
Steven Smith: ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக விளையாடி சதம் பதிவு செய்தார். (AP)
Steven Smith: ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக விளையாடி சதம் பதிவு செய்தார்.

Steven Smith: ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக விளையாடி சதம் பதிவு செய்தார்.

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்களை குவித்தது. 100.4 ஓவர்களில் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அதிகபட்சமாக ஆஸி., அதிரடி வீரர் ஸ்டீவ் ஸ்மித், சதம் விளாசினார். 184 பந்துகளில் 110 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் அறிமுக வீரர் ஜோஷ் டங் பந்துவீச்சில் கேட் ஆனார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு இது டெஸ்டில் இது 32வது சதம் ஆகும்.

வார்னர், டிராவிஸ் ஹெட் ஆகியோரும் அரை சதம் பதிவு செய்தனர். இங்கிலாந்து வீரர் ஜோஷ் டங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது. உணவு இடைவேளையின்போது 4 ஓவர்களுக்கு அந்த அணி 13 ரன்கள் எடுத்திருந்தது.

உஸ்மான் கவாஜா, 17 ரன்களிலும், லபுஸ்சேன் 47 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கிரீன் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 22 ரன்கள் எடுத்தார். பேட் கம்மின் 22 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

நாதன் லயன் 7 ரன்களிலும், ஹேஸில்வுட் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒல்லி ராபின்சன் 3 விக்கெட்டுகளையும் ஜோஷ் டங் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டுவதற்கு ஆஸி., பவுலர் நாதன் லயன் இன்னும் 5 விக்கெட்டுகள் குறைவாக உள்ளார்.

அதை இந்த டெஸ்டில் கடந்து சாதனைப் படைக்க வாய்ப்புள்ளது.

ஆஷஸ் கோப்பையை 35-வது முறையாக தக்கவைத்துக்கொள்ள ஆஸ்திரேலியா இன்னும் இரண்டு வெற்றிகளை பெற்றால் போதும்.

ஆஸி., பவுலர் ஜோஷ் ஹேசில்வுட் சர்வதேச போட்டிகளில் 400 விக்கெட்டுகளை எடுக்க ஒன்பது விக்கெட்டுகள் தேவை.

ஆஷஸ் தொடர் இரண்டாவது டெஸ்ட் முதல் நாளில் இங்கிலாந்தின் முடிவும், திட்டமும் அவர்களுக்கு எந்த வகையில் பலம் அளிக்காமல் போயுள்ளது. தற்போது ஆஸ்திரேலியா வலுவான நிலையில் இருந்து வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி