தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Lucknow Super Giants: 'லக்னோ மைதானத்திற்கு ரசிகர்களை வர வைத்தது கடினமான பணி': Lsg அணி சிஇஓ

Lucknow Super Giants: 'லக்னோ மைதானத்திற்கு ரசிகர்களை வர வைத்தது கடினமான பணி': LSG அணி சிஇஓ

Manigandan K T HT Tamil

Jun 29, 2023, 04:16 PM IST

google News
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்.எஸ்.ஜி) ரசிகர்களுக்கு விருந்தளித்தது என கூறலாம். ஏனெனில் லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம் முதல் முறையாக ஐபிஎல் போட்டிகளை நடத்தியது. (hindustantimes)
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்.எஸ்.ஜி) ரசிகர்களுக்கு விருந்தளித்தது என கூறலாம். ஏனெனில் லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம் முதல் முறையாக ஐபிஎல் போட்டிகளை நடத்தியது.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்.எஸ்.ஜி) ரசிகர்களுக்கு விருந்தளித்தது என கூறலாம். ஏனெனில் லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம் முதல் முறையாக ஐபிஎல் போட்டிகளை நடத்தியது.

புதிய ஐ.பி.எல் மைதானத்திற்கு அதிக பார்வையாளர்களை ஈர்ப்பது கடினமான பணியாக இருந்தது என்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி வினோத் பிஸ்த் தெரிவித்தார்.

கேப்டன் கே.எல்.ராகுல் இல்லாத லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 இன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறத் தவறிவிட்டது.

அந்த அணி எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் தோற்றது.

ஐபிஎல் 2023 சீசன் நடந்து கொண்டிருந்தபோது ராகுலுக்கு தொடையில் காயம் ஏற்பட்டு தொடரில் இருந்து விலகினார். ஆனால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்.எஸ்.ஜி) ராகுலின் காயத்தால் பாதிக்கப்படவில்லை என்றே கூற வேண்டும். அந்த அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

ஆர்.பி.எஸ்.ஜி குழுமத்திற்கு சொந்தமான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்.எஸ்.ஜி) ஐபிஎல் 2022 சீசனிலும் புள்ளிகள் பட்டியலில் 3 வது இடத்தைப் பிடித்தது. 2023 சீசனில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்.எஸ்.ஜி) ரசிகர்களுக்கு விருந்தளித்தது என கூறலாம். ஏனெனில் லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம் முதல் முறையாக ஐபிஎல் போட்டிகளை நடத்தியது.

ஆர்.பி.எஸ்.ஜி ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கர்னல் வினோத் பிஷ்த் கூறுகையில், "முதல்முறையாக போட்டி நடந்த லக்னோ மைதானத்திற்கு பெரிய அளவில் ரசிகர்களை ஈர்ப்பது ஒரு சவாலாக இருந்தது. ஆனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்.எஸ்.ஜி) தேவையானதை முடிந்த வரை செய்தது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுடன் ஒரு உணர்ச்சிபூர்வமான இணைப்பை உருவாக்குவது எங்களுக்கு முக்கியமானது.

எனவே எங்கள் முன்முயற்சிகள் சிறந்த பலனை அளித்ததைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றார் பிஸ்த்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முன்முயற்சிகளின் விளைவாக, சொந்த மண்ணில் லக்னோவின் முதல் சீசனுக்கு கிட்டத்தட்ட இந்த சீசன் முழுவதும் சுமார் மூன்று லட்சம் ரசிகர்கள் லக்னோ மைதானத்தில் கிரிக்கெட்டை ரசித்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி