IND vs WI 2nd Test: பின்தங்கிய வெஸ்ட் இண்டீஸ் - மழை தான் காரணமா?
Jul 23, 2023, 07:06 AM IST
இரண்டாவது டெஸ்ட் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்திருக்கிறது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரிணிடாட்டில் உள்ள போர்ட் ஆஃப் ஸ்பெயின் பகுதிகள் நடந்து வருகிறது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 438 ரன்கள் எடுத்து இரண்டாவது நாளில் ஆல் அவுட் ஆனது. 500 ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 121 ரன்களும், கேப்டன் ரோகித் சர்மா 80 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 61 ரன்களும், ஜெய்ஸ்வால் 57 ரன்களும், அஸ்வின் 56 ரன்களும் அடித்திருந்தனர்.
இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் கேமார் ரோஜ், ஜோமேல் வாரிகன் இருவரும் தலா மூன்று விக்கெட்டுகள், ஜாசன் ஹோல்டர் இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர்.
அதன் பின்னர் தங்களது முதல் இன்னிசை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 41 ஓவர்களில் 86 ரன்கள் எடுத்திருந்தது.
ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் தொடக்க வீரரான தேஜ் நரின் சந்தர்பால் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் மூன்றாவது நாளான நேற்று வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நல்ல தொடக்கத்தோடு சிறப்பாக விளையாடினர்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரன்கள் 117 ஆக உயர்ந்தது. பின்னர் கிரிக் மெக்கன்சி 32 ரன்களில் ஆட்டம் இழந்தார். குறிப்பாக அறிமுக வீரரான முகேஷ் குமார் வேதப்பந்து வீச்சில் ஆட்டத்தை இழந்துள்ளார்.
இது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முகேஷ் குமார் வீழ்த்திய முதல் விக்கெட் ஆகும். மழையின் காரணமாக சுமார் 30 நிமிடம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதற்கு முன்னரே மதிய உணவு இடைவேளை எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன் பின்னர் ஆட்டம் தொடங்கிய போது 75 ரன்கள் எடுத்த பிராத் வெயிட், அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மீண்டும் மழை குறிப்பிட்ட காரணத்தினால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. சிறிது நேரம் கழித்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது.
அதன் பின்னர் மூன்றாம் நாள் ஆட்டம் நேர முடிவில் 108 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்திருந்தது. தற்போது 37 ரன்களுடன் அலிக் அதானேஷ், 11 ரன்களுடன் ஜேசன் ஹோல்டர் ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளனர்.
இந்திய அணியின் சார்பாக ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளும், முகமது சிராஜ், முகேஷ் குமார், அஸ்வின் ஆசியோர் தலா ஒரு விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர். இந்திய அணியுடன் ஒப்பிடுகையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 29 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
டாபிக்ஸ்