தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asian Kabaddi Championship: ஃபைனலில் நுழைந்தது இந்தியா.. சரணடைந்தது முன்னாள் சாம்பியன்!

Asian Kabaddi Championship: ஃபைனலில் நுழைந்தது இந்தியா.. சரணடைந்தது முன்னாள் சாம்பியன்!

Manigandan K T HT Tamil

Jun 29, 2023, 05:46 PM IST

google News
இந்திய அணியிடம் சரணடைந்தது முன்னாள் சாம்பியன் ஈரான். இந்தியா தொடர்ந்து வீறு நடை போட்டு வருகிறது. (@Media_SAI)
இந்திய அணியிடம் சரணடைந்தது முன்னாள் சாம்பியன் ஈரான். இந்தியா தொடர்ந்து வீறு நடை போட்டு வருகிறது.

இந்திய அணியிடம் சரணடைந்தது முன்னாள் சாம்பியன் ஈரான். இந்தியா தொடர்ந்து வீறு நடை போட்டு வருகிறது.

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக 4 கேம்களிலும் ஜெயித்து வீறுநடை போடுகிறது.

தென் கொரியாவில் கடந்த 27ம் தேதி முதல் நடந்துவரும் ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக 3வது வெற்றியைப் பெற்று வீறுநடை போட்டு வருகிறது.

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாளில் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது. தமிழக மண்ணுடன் அதிகம் தொடர்புடையது கபடி விளையாட்டு. இது இந்திய அளவிலும் உலக அளவிலும் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.

மூன்றாவது நாளான இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் சைனீஸ் தைபேவும் ஜப்பானும் மோதின. இந்த ஆட்டத்தில் சைனீஸ் தைபே 37-29 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து 7.30 மணிக்கு நடக்க இருந்த தென்கொரியா-ஹாங் காங் இடையிலான ஆட்டம் சில காரணங்கள் தள்ளி வைக்கப்பட்டது.

பின்னர், 10.30 மணிக்கு முன்னாள் சாம்பியன் ஈரானை எதிர்கொண்டது இந்தியா.

பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு சரியாக மல்லுகட்டியது ஈரான்.

இறுதியில் இந்தியா 33-28 என்ற கணக்கில் வெற்றி கண்டது.

இதன்மூலம், இந்திய அணி தொடர்ச்சியாக 4 கேம்களிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் கம்பீரமாக இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து சைனீஸ் தைபே, தென் ஆப்பிரிக்கா இடையே நடந்த மற்றொரு ஆட்டத்தில் சைனீஸ் தைபே 70-25 என்ற புள்ளிக் கணக்கில் ஜெயித்தது.

அதேநேரம், தொடர்ச்சியாக ஜெயித்து வந்த ஈரான், முதல் முறையாக இந்தியாவிடம் சரணடைந்தது. இதன்மூலம், அந்த அணி 6 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது.

நாளை ஜப்பான்-ஈரான், இந்தியா-ஹாங்காங் ஆகிய அணிகள் கடைசீ லீக்கில் மோதுகின்றன.

லீக் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பைனலில் மோதும்.

இதுவரை நடைபெற்று முடிந்திருக்கும் 10 தொடர்களில் இந்திய அணி 7 முறை தங்கம் வென்று, வெற்றிகரமான அணியாக வலம் வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி