தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asian Games Volleyball: வெள்ளி, வெண்கல பதக்க வெற்றியாளர்களை வீழ்த்திய இந்தியா காலிறுதிக்கு தகுதி

Asian Games VolleyBall: வெள்ளி, வெண்கல பதக்க வெற்றியாளர்களை வீழ்த்திய இந்தியா காலிறுதிக்கு தகுதி

Sep 22, 2023, 04:57 PM IST

google News
ஆசிய விளையாட்டு வாலிபால் போட்டியில் வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்ற தென் கொரியா, சீனா தைப்பே அணிகளை வீழ்த்திய இந்தியா காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவிலுள்ள ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. நாளை தொடக்க விழா நடைபெற இருக்கும் நிலையில் வாலிபால், கிரிக்கெட் உள்பட சில போட்டிகள் கடந்த 19ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து ஆண்களுக்கான வாலிபால் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் கம்போடியா அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. இதைத்தொடர்ந்து வெள்ளி பதக்கம் வென்ற பலம் வாய்ந்த அணியான தென் கொரியாவை எதிர்கொண்டது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது. இதன் பின்னர் இன்று சீனா தைபே அணிக்கு எதிராக மோதியது. வெண்கல பதக்கம் வென்ற அணியான சீனா தைபேவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்திய இந்தியா காலிறுதிக்கு தகுதி பெற்றது.

இந்த போட்டியில் விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள் 25-22, 25-22, 25-21 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றனர். காலிறுதி போட்டியில் உலகின் சிறந்த அணியான ஜப்பானை இந்தியா எதிர்கொள்கிறது.

கடந்த 2018 ஆசிய விளையாட்டு போட்டியில் தென் கொரியா வெள்ளியும்,  சீனா தைபே அணி வெண்கலமும் வென்றன. முறையே இந்த இரு அணிகளையும் வீழ்த்தி இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி