தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asian Games Badminton: ஆசிய கேம்ஸ் வரலாற்றில் முதல் முறை.. தங்கம் வென்ற சாத்விக்-சிராக் இணை!

Asian Games Badminton: ஆசிய கேம்ஸ் வரலாற்றில் முதல் முறை.. தங்கம் வென்ற சாத்விக்-சிராக் இணை!

Manigandan K T HT Tamil

Oct 07, 2023, 03:02 PM IST

google News
முதல் செட்டில் வெற்றி பெற்ற சாத்விக்சாய்ராஜ்-சிராக் ஜோடி வேகம் குறையாமல், 2-வது செட்டில் வேகம் செலுத்தியது. (PTI)
முதல் செட்டில் வெற்றி பெற்ற சாத்விக்சாய்ராஜ்-சிராக் ஜோடி வேகம் குறையாமல், 2-வது செட்டில் வேகம் செலுத்தியது.

முதல் செட்டில் வெற்றி பெற்ற சாத்விக்சாய்ராஜ்-சிராக் ஜோடி வேகம் குறையாமல், 2-வது செட்டில் வேகம் செலுத்தியது.

ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவர் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர ஜோடி சாத்விக்-சிராக் தங்கம் வென்றது.

இந்திய ஜோடி 57 நிமிடங்களில் தென் கொரியாவின் சோல்கியூ சோய் மற்றும் வோன்ஹோ கிம் ஜோடியை 21-18, 21-16 என்ற செட் கணக்கில் தோற்கடித்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய பேட்மிண்டன் ஜோடி என்ற பெருமையைப் பெற்றது.

முதல் செட்டில் தென்கொரிய ஜோடி 18-15 என முன்னிலையில் இருந்தது. இருப்பினும், நட்சத்திர இந்திய ஜோடி மீண்டும் போட்டிக்குள் நுழைந்து, தொடர்ந்து ஆறு புள்ளிகளை வென்று, இறுதியில் முதல் செட்டை 21-18 என்ற கணக்கில் கைப்பற்றியது.

முதல் செட்டில் வெற்றி பெற்ற சாத்விக்சாய்ராஜ்-சிராக் ஜோடி வேகம் குறையாமல், 2-வது செட்டில் வேகம் செலுத்தியது.

“சாத்விக்-சிராக் இணை பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில் தங்கம் வென்றதுடன், ஆசிய விளையாட்டு வரலாற்றில் முதல் முறையாக தங்கப் பதக்கத்தை வென்றது. அவர்களின் நம்பமுடியாத குழு உழைப்பு மற்றும் அசைக்க முடியாத மனப்பான்மை சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த வரலாற்று வெற்றியைக் கொண்டாடுவோம், அவர்களின் அசாதாரண திறமைக்கு வணக்கம் செலுத்துவோம்!” என்று இந்திய விளையாட்டு ஆணையம் எக்ஸ் இல் பதிவிட்டுள்ளது.

முன்னதாக, ஆசிய விளையாட்டு ஆடவர் இரட்டையர் பிரிவு பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய ஜோடி என்ற பெருமையை சாத்விக்- சிராக் ஜோடி பெற்றுள்ளது.

அரையிறுதியில் ஒலிம்பிக் சாம்பியனான ஆரோன் சியா மற்றும் மலேசியாவின் சோ வூய் யிக் ஆகியோரை தோற்கடித்தனர். முடிவில் இந்திய ஜோடி 21-17, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது.

24 நிமிடங்கள் நீடித்த முதல் செட்டில் மலேசிய ஜோடி சவாலாக இருந்தது.

இரண்டாவது செட்டில், இந்திய ஜோடியின் தீவிரத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய அவர்கள், 23 நிமிடங்களில் 21-12 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி