Asian Games Boxing: ஆசிய கேம்ஸ் குத்துச்சண்டையில் வெள்ளி வென்றார் லவ்லினா பார்கோஹைன்
Oct 04, 2023, 03:49 PM IST
பெண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவு போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனையான லவ்லினா போர்கோஹைன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். ஆனால், அவரால் தங்கம் வெல்ல முடியவில்லை.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 75 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
முதல் சுற்றில் லவ்லினா மற்றும் லி கியான் இடையே கடுமையான போட்டி நிலவியது, ஆனால் முடிவு 3-2 என்ற கணக்கில் லீக்கு சாதகமாக சென்றது.
இரண்டாவது சுற்றில், இந்திய குத்துச்சண்டை வீராங்கனையின் தாடையில் மோதி இரண்டு புள்ளிகளைப் பெற்றதால், லவ்லினாவை லீ தோற்கடித்தார். லவ்லினா 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
மூன்றாவது சுற்றில் தீர்ப்பு லீயை நோக்கி சென்றதால், லவ்லினா வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற லி கியான், 2016 ரியோ ஒலிம்பிக்கில் பெண்கள் மிடில்வெயிட் பிரிவில் வெண்கலப் பதக்கமும், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இதே பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றார். டோக்கியோவில் வெல்டர்வெயிட் பிரிவில் லவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றார்.
முன்னதாக, தாய்லாந்தின் பைசன் மணிகொண்டா என்பவருக்கு எதிரான அரையிறுதி போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லோவ்லினா, 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார்.
முதல் சுற்றில் தடுப்பாட்டம் விளையாடிய லவ்லினா, கடைசி நிமிடத்தில் சிறப்பான பன்ச் மூலம் பைசன் மணிகொண்டாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து அடுத்தடுத்த சுற்றுகளில் ஆதிக்கம் செலுத்தி தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்