தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asian Games Badminton: ஆசிய கேம்ஸ் பேட்மிண்டன் காலிறுதியில் சிராக்-சாத்விக் ஜோடி

Asian Games Badminton: ஆசிய கேம்ஸ் பேட்மிண்டன் காலிறுதியில் சிராக்-சாத்விக் ஜோடி

Manigandan K T HT Tamil

Oct 04, 2023, 04:32 PM IST

google News
சாத்விக்சாய்ராஜ்-சிராக் ஜோடி 24-22, 16-21, 21-12 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் ரோலி கர்னாண்டோ லியோ-டேனியல் மார்த்தின் ஜோடியை தோற்கடித்தது. (PTI)
சாத்விக்சாய்ராஜ்-சிராக் ஜோடி 24-22, 16-21, 21-12 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் ரோலி கர்னாண்டோ லியோ-டேனியல் மார்த்தின் ஜோடியை தோற்கடித்தது.

சாத்விக்சாய்ராஜ்-சிராக் ஜோடி 24-22, 16-21, 21-12 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் ரோலி கர்னாண்டோ லியோ-டேனியல் மார்த்தின் ஜோடியை தோற்கடித்தது.

ஆசிய கேம்ஸ் 2023, பேட்மிண்டனில் ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் சிராக்-சாத்விக்சாய்ராஜ் ஜோடி முன்னேறியது.

ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் சிராக் ஷெட்டி- சாத்விக்சாய்ராஜ் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.

சாத்விக்சாய்ராஜ்-சிராக் ஜோடி 24-22, 16-21, 21-12 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் ரோலி கர்னாண்டோ லியோ-டேனியல் மார்த்தின் ஜோடியை தோற்கடித்தது.

சாத்விக்சாய்ராஜ்-சிராக் ஜோடி 24-22, 16-21, 21-12 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் ரோலி கர்னாண்டோ லியோ-டேனியல் மார்த்தின் ஜோடியை தோற்கடித்தது.

இதற்கிடையில், ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையும் ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான பி.வி.சிந்து மற்றும் எச்.எஸ்.பிரணாய் முன்னேறினர்.

சிந்து தனது ஆட்டத்தில் இந்தோனேசியாவின் புத்ரி குசுமா வர்தானியை 2-0 (21-16, 21-16) என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். மொத்தம் 55 நிமிடங்களில் இரண்டு செட்களையும் வென்றார். மற்றொரு ஆட்டத்தில் பிரணாய் 2-0 (21-12, 21-13) என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் டிமிட்ரி பனாரினை தோற்கடித்தார்.

கலப்பு இரட்டையர் பிரிவு 16-வது சுற்றில் இந்தியாவின் சாய் பிரதீக்- தனிஷா கிராஸ்டோ ஜோடியும், மகளிர் இரட்டையர் பிரிவு 16-வது சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி- காயத்ரி கோபிசந்த் ஜோடியும் தோல்வியடைந்தன.

சாய் பிரதீக்-தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-18, 21-8 என்ற செட் கணக்கில் உலகின் 9-ம் நிலை மலேசிய ஜோடியான சென் டாங் ஜீ- தோ ஈ வெய் ஜோடியிடம் தோல்வியடைந்தது. ட்ரீசா-காயத்ரி ஜோடி 21-15, 18-21, 21-13 என்ற செட் கணக்கில் கொரிய ஜோடியான கிம் சோயோங்- காங் ஹீயோங் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

தனிஷா மகளிர் இரட்டையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அஸ்வினி பொன்னப்பாவுடன் விளையாடுகிறார். இன்று காலை 10:30 மணிக்கு ட்ரீசா-காயத்ரியின் பயணம் ரவுண்ட் ஆஃப் 16 இல் வெளியேறியதுடன் முடிவடைந்தது.

முன்னதாக, ட்ரீசா ஜாலி- காயத்ரி கோபிசந்த் புல்லேலா ஜோடி 21-14, 21-12 என்ற நேர் செட் கணக்கில் மாலத்தீவின் அமிநாத் நபீஹா- பாத்திமாத் நபாஹா ஜோடியை வீழ்த்தி 16-வது சுற்றுக்கு முன்னேறியது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி