Asian Games Football: கேப்டன் சுனில் சேத்ரி அற்புத கோல்!வங்தேசத்தை வீழ்த்தி அடுத்த சுற்று வாய்ப்பை உறுதிபடுத்திய இந்தியா
Sep 21, 2023, 06:03 PM IST
கட்டாயமாக வெற்றி பெற்றாக வேண்டிய போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி தனது அடுத்து சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது.
ஆசிய விளையாட்டில் கால்பந்து போட்டியில் சீனாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது. அந்த போட்டியில் இந்தியா 1-5 என்ற கோல் கணக்கில் சீனாவிடம் வீழ்ந்தது.
இதைத்தொடர்ந்து கட்டாய வெற்றி பெற்றாக வேண்டிய போட்டியில் வங்கதேசத்தை இன்று எதிர்கொண்டது. இந்திய அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான சுனில் சேத்ரி எப்போதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் தவறியதில்லை.
இதையடுத்து பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணி வீரர்களுக்கு கோலுக்கான போராட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் பாதி வரை இரண்டு அணிகளும் பல்வேறு ஷாட்களை முயற்சித்து அது கோலாக மாற்ற முடியவில்லை.
பின்னர் இரண்டாவது பாதியிலும் கோலுக்கான வேட்டையை இந்தியா, வங்கதேச அணி வீரர்கள் தொடர்ந்தனர். ஆட்டத்தின் 85வது நிமிடத்தில் கிடைத்த பொனல்டி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு வழியாக இந்திய கேப்டன் சுனில் சேத்ரி முதல் கோல் அடித்தார். இதனால் இந்தியா முன்னிலை பெற்றது. இந்த கோலுக்கு பிறகு ஆட்டம் முடிவடைய சில நிமிடங்களே இருந்த நிலையில், அடுத்து கோல் அடிக்கும் முயற்சியை விடுத்து தடுப்பாட்டத்தில் இந்திய வீரர்கள் கவனம் செலுத்தினர்.
இறுதிய முழு ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ளது. இதே குரூப்பில் சீனா, வங்கதேசம், மியான்மர் ஆகிய அணிகள் உள்ளது.
தற்போது இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா ஒரு வெற்றி, ஒரு தோல்வியை பெற்றுள்ளது. இந்தியா தனது அடுத்த போட்டியில் மியான்மரை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெறுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்