தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asian Games Boxing: குத்துச்சண்டையில் பதக்கம் உறுதி.. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற வீராங்கனை

Asian Games Boxing: குத்துச்சண்டையில் பதக்கம் உறுதி.. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற வீராங்கனை

Manigandan K T HT Tamil

Oct 01, 2023, 02:36 PM IST

google News
இதில் லோவ்லினா 5-0 என்ற செட் கணக்கில் தென்கொரியாவின் சுயோன் சியோங்கை வென்றார். (PTI)
இதில் லோவ்லினா 5-0 என்ற செட் கணக்கில் தென்கொரியாவின் சுயோன் சியோங்கை வென்றார்.

இதில் லோவ்லினா 5-0 என்ற செட் கணக்கில் தென்கொரியாவின் சுயோன் சியோங்கை வென்றார்.

மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பர்வீன்.

அவர் தனது காலிறுதி ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானின் சிடோரா டர்டிபெகோவாவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

இந்த போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற ஐந்தாவது இந்திய குத்துச்சண்டை வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ஆசிய விளையாட்டுப் போட்டியில் 92 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய குத்துச்சண்டை வீரர் நரேந்தர், இந்தியாவுக்கு நான்காவது பதக்கத்தை உறுதி செய்தார்.

காலிறுதிப் போட்டியில் ஈரானின் இமான் ரமேசானை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்தார்.

மகளிர் 75 கிலோ எடைப்பிரிவில் இந்திய ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்னும் அரையிறுதிக்கு முன்னேறி இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கத்தை உறுதி செய்தார்.

இதில் லோவ்லினா 5-0 என்ற செட் கணக்கில் தென்கொரியாவின் சுயோன் சியோங்கை வென்றார்.

54 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ப்ரீத்தி பவார் அரையிறுதிக்கு முன்னேறினார். குறைந்தபட்சம் ஒரு வெண்கலப் பதக்கத்தை மட்டுமல்ல, பாரிஸ் ஒலிம்பிக் 2024 ஒதுக்கீட்டை நாட்டிற்கு உறுதி செய்தார்.

காலிறுதியில் கஜகஸ்தானின் ஜைனா ஷெகர்பெகோவாவை 4-1 என்ற கணக்கில் தோற்கடித்தார்.

50 கிலோ எடைப்பிரிவில் ஜோர்டானின் ஹனான் நாசரை வீழ்த்தி இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்தார் நிகாத்.

தற்போது நடைபெற்று வரும் குத்துச்சண்டை போட்டிகள் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 5 வரை ஹாங்சோ ஜிம்னாசியத்தில் நடத்தப்படுகின்றன. இதில் உலக சாம்பியன் நிகாத் ஜரீன், லவ்லினா போர்கோஹெய்ன் தலைமையிலான 13 பேர் கொண்ட இந்திய குத்துச்சண்டை அணி பங்கேற்று இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை