தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asian Games 2023: மூன்று பதக்கங்களுடன் படகு போட்டியை நிறைவு செய்த இந்தியா

Asian Games 2023: மூன்று பதக்கங்களுடன் படகு போட்டியை நிறைவு செய்த இந்தியா

Sep 28, 2023, 10:00 AM IST

google News
ஆசிய விளையாட்டு பாய்மர படகு போட்டியில் இந்திய அணி மூன்று பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. புள்ளிப்பட்டியலில் தற்போது இந்திய அணி 7வது இடத்தில் உள்ளது.
ஆசிய விளையாட்டு பாய்மர படகு போட்டியில் இந்திய அணி மூன்று பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. புள்ளிப்பட்டியலில் தற்போது இந்திய அணி 7வது இடத்தில் உள்ளது.

ஆசிய விளையாட்டு பாய்மர படகு போட்டியில் இந்திய அணி மூன்று பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. புள்ளிப்பட்டியலில் தற்போது இந்திய அணி 7வது இடத்தில் உள்ளது.

ஆசிய விளையாட்டில் பாய்மர படகு போட்டியில் இந்தியாவை சேர்ந்த விஷ்ணு சரவணன் ஆண்கள் பிரிவில் வெண்கலம் வென்றுள்ளனர். இதன் மூலம் ஐஎல்சிஏ-7 பிரிவு படகு போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது.

சரவணன் பங்கேற்ற 11 ரேஸ் போட்டிகளில் நிகர புள்ளிகளாக 34 பெற்று, ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெள்ளி பதக்கத்தை தவறவிட்டுள்ளார்.

சரவணன் மொத்தம் 48 புள்ளிகளை பெற்ற நிலையில், தனது 8வது ரேஸில் தொழில்நுட்ப் பிரச்னை காரணமாக பாதியிலேயே விலகினார். எனவே பெனால்டியுடன் சேர்த்து 14 புள்ளிகளை பெற்றார். இந்த 14 புள்ளிகள் கடைசி நேரத்தில் குறைத்ததன் காரணமாக மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலம் வென்றார்.

தென் கொரியா நாட்டை சேர்ந்த ஜேமின் எச்ஏ 33 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், சிங்கப்பூரை சேர்ந்த ஜின் ஹன் ரயான் 26 புள்ளிகளுடன் முதல் இடத்தையும் பிடித்தனர்.

பெண்களுக்கான ஐஎல்சிஏ-6 போட்டியில் இந்தியாவின் நேத்ரா குமணன் நான்காவது இடத்தை பிடித்தார். போதிய காற்று இல்லாமல் போனது அவருக்கு சிக்கலை ஏற்படுத்திய நிலையில் 12 ரேஸ்களில் பங்கேற்று நான்காவது இடத்தை பிடித்தார் நேத்ரா. இவர் மொத்தம் 41 நிகர புள்ளிகளை பெற்றார்.

2017இல் தேசிய அளவில் சாம்பியன் பட்டத்தை வென்ற சரவணன், டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்ட்ட இரண்டாவது ஆசிய வீரர் என்ற பெருமையை பெற்றார். 2021இல் குரோசியா நாட்டில் நடைபெற்ற 21 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றார் சரவணன். அத்துடன் 2021இல் ஆசிய சாம்பியன்ஷிப்பில் ஒலிம்பிக் குவாலிபயர் போட்டியில் வெள்ளி வென்றார்.

கடந்த 2018 ஆசிய விளையாட்டில் இந்தியா இரண்டு வெண்கல பதக்கங்களை வென்றது. அதை காட்டிலும் காட்டிலும் இந்த முறை இந்திய படகு போட்டியாளர்கள் ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.

அதேபோல் ஐஎல்சிஏ7 பாய்மர படகு போட்டியில் இந்தியாவின் எபாட் அலி வெண்கலம் வென்றார். 

முன்னதாக, 17 வயதாகும் நேகா தாக்கூர், வெள்ளி பதக்கம் வென்றார். இது இந்த விளையாட்டில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கமாக அமைந்தது.

ஆசிய விளையாட்டு நான்காம் நாள் முடிவு வரை இந்தியா 5 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என 22 பதக்கங்களுடன் 7வது இடத்தில் உள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி