Asian Games 2023: குத்துசண்டையில் பதக்கம் வென்ற இளம் வீராங்கனை ப்ரீத்தி! கோனோ ரேஸில் இந்தியாவுக்கு வெண்கலம்
Oct 03, 2023, 04:41 PM IST
ஆசிய விளையாட்டு போட்டியில் பத்தாவது நாளான இன்று குத்துச்ண்டை விளையாட்டில் இந்தியா வீராங்கனை ப்ரீத்தி பவார் வெண்கலம் வென்றுள்ளார்.
சீனாவிலுள்ள ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியின் பத்தாவது நாளான இன்று இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளது. மகளிருக்கான குத்துசண்டை போட்டியிலும், ஆண்களுக்கு ஆண்கள் கேனோ ரேஸிலும் இந்தியாவுக்கு வெண்கல பதக்கங்கள் கிடைத்துள்ளது.
மகளிருக்கான குத்துசண்டை விளையாட்டில் 54 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பிரீத்தி பவார் வெண்கலம் வென்றுள்ளார். அரையிறுதி போட்டியில் சீனா வீராங்கழனை யுவாங் சங் என்பவரை எதிர்கொண்ட ப்ரீத்தி 0-5 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார்.
இந்த போட்டி ஆரம்பம் முதலே சீனா வீராங்கனை ஆதிக்கம் செலுத்தும் விதமாக விளையாடினார். இதனால் அட்டாக்கிங்கை விட தடுப்பாட்டம் ஆடுவதில் கவனம் செலுத்திய ப்ரீத்தி புள்ளிகளை இழந்து தோல்வியுற்றார்.
இருப்பினும் வெண்கலம் வென்று அவர் அசத்தியுள்ளார். ஆசிய விளையாட்டு குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை நிகத் ஸரீனுக்கு பிறகு வெண்கலம் வென்ற வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் ப்ரீத்தி.
2020 மற்றும் 2021இல் நடைபெற்ற இளைஞர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி, தங்கம் வென்று அசத்தியுள்ளார் ப்ரீத்தி. இதன் பின்னர் 2021இல் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இதேபோல் ஆண்களுக்கான 1000 மீட்டர் இரட்டையர் கேனோ ரேஸ் விளையாட்டில் இந்திய வீரர்களான அர்ஜுன் சிங் மற்றும் சுனில் சிங் ஆகியோர் மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலம் வென்றனர்.
இது இன்றைய நாளில் இந்தியாவுக்கு கிடைத்த இரண்டாவது பதக்கமாக அமைந்துள்ளது. மொத்தம் 62 பதக்கங்களை பெற்றிக்கும் இந்திய அணி தொடர்ந்து நான்காவது இடத்தில் நீடித்து வருகிறது.
அத்துடன் குத்துசண்டை விளையாட்டில் லோவ்லினா ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார். வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு ஒரு தங்கம் உள்பட மூன்று பதக்கங்கள் உறுதியாகியுள்ளது.
பெண்களுக்கான 8 மீட்டம் ஓட்டப்பந்தயம், ஆண்களுக்கான 4x400மீ தொடர் ஓட்டங்களில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது.
ஆண்களுக்கான கிரி்ககெட், கபடி, மகளிருக்கான ஹாக்கி, பேட்மிண்டன் போட்டிகளில் அடுத்தடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9