Asian Games Badminton: இந்திய பேட்மிண்டன் அணிக்கு பின்னடைவு.. காரணம் இதுதான்
Oct 01, 2023, 02:36 PM IST
ஆடவர் ஒற்றையர் பிரிவில் மிதுன் மஞ்சுநாதன், அவருக்கு பதிலாக களமிறங்குகிறார். இந்தியா - சீனா ஆடவர் பேட்மிண்டன் பைனல் போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் தங்கப் பதக்கத்திற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டிக்கு சற்று முன்பு இந்திய ஆடவர் பாட்மிண்டன் அணி பெரும் பின்னடைவை எதிர்கொண்டது. ஏனெனில் ஃபார்மில் இருந்த எச்.எஸ்.பிரணாய் காயம் காரணமாக இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பங்கேற்கவில்லை என்று Olympics.com செய்தி வெளியாகியுள்ளது.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் மிதுன் மஞ்சுநாதன், அவருக்கு பதிலாக களமிறங்குகிறார். இந்தியா - சீனா ஆடவர் பேட்மிண்டன் பைனல் போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய ஆடவர் பாட்மிண்டன் அணி அரையிறுதியில் தென் கொரியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இப்போட்டியில் பதக்கத்தை உறுதி செய்திருக்கும் இந்திய அணி, தற்போது சீனாவை எதிர்கொள்வதால் தங்கத்தை இலக்காகக் கொண்டுள்ளது.
சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் தென் கொரியாவின் ஹியோக்ஜின் ஜியோனை எதிர்கொண்டார் பிரணாய். உலக சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்ற இவர் 18-21, 21-16, 21-19 என்ற செட் கணக்கில் ஹியோக்ஜின் ஜியோனுக்கு எதிராக வெற்றி பெற்றார்.
இந்திய பேட்மிண்டன் அணி: லக்ஷ்யா சென் - ஷி யூ குய், சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி / சிராக் ஷெட்டி - லியாங் வெய்கெங் / வாங் சாங், கிடாம்பி ஸ்ரீகாந்த் - லி ஷிஃபெங், துருவ் கபிலா / சாய் பிரதீக் எதிர் லியு யூசென் / ஓ சுவான்யி, மிதுன் மஞ்சுநாதன் - வெங் ஹோங்யாங்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்