Asian Games 2023: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 5வது பதக்கம்! அணி நிகழ்வில் தங்கம் வென்று சாதனை
Sep 28, 2023, 12:23 PM IST
ஆசிய விளையாட்டு போட்டியில் ஐந்தாவது நாளான இன்று இந்தியாவுக்கு 10மீ ஏர் பிஸ்டல் போட்டியில் தங்கம் கிடைத்துள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு போட்டிகளில் இந்திய பதக்கங்களை அள்ளி வருகிறது.
இதையடுத்து ஆசிய விளையாட்டு போட்டியின் ஐந்தாவது நாளான இன்று இந்தியாவுக்கு துப்பாக்கி சுடுதலில் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவு போட்டியில் தங்கம் கிடைத்துள்ளது. சரப்ஜோத் சிங், அர்ஜுன் சிங் சீமா, ஷிவா நர்வால் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1734 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை பிடித்திருக்கும் சீனா 1733 புள்ளிகளுடன், ஒரு புள்ளி மட்டுமே குறைவாக உள்ளது. மூன்றாவது இடத்தை 1730 புள்ளிகளுடன் வியட்நாம் அணி பிடித்துள்ளது.
துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு கூடுதலாக ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. துப்பாக்கி சுடுதலில் மட்டும் இந்தியா ஐந்து பதக்கங்களை வென்றுள்ளது.
10மீ ஏர் பிஸ்டல் சுடுதல் தனிப்பட்ட போட்டியில், சரப்ஜோத் சிங் 199 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் முடித்தார். இந்த நிகழ்வில் பங்கேற்ற மற்றொரு இந்தியரான அர்ஜுன் 113 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தை பிடித்தார்.
ஒட்டுமொத்தமாக 10மீ ஏர் பிஸ்டல் சுடுதலில் சரப்ஜோத் சிங் 580 புள்ளிகளுடன் 5வது இடத்தையும், அர்ஜுன் 578 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தையும் பிடித்து நிறைவு செய்துள்ளனர்.
ஏற்கனவே 25மீ பிஸ்டல் அணி நிகழ்வில் இந்தியா சார்பில் மனு பாக்கர், ஈஷா சிங், ரிதம் சங்வான் ஆகியோர் தங்கம் வென்றனர். இதற்கு முன்னர் 10மீ ஏர் ரைபிள் அணி நிகழ்வில் இந்தியாவின் திவ்யனாஷ் பன்வார், ருத்ரான்க்ஷ் பாடீல், ஐஸ்வரி தோமர் ஆகியோர் தங்கம் வென்றனர்.
50மீ ரைபிள் 3 பொசிஷன் பெண்கள் பிரிவு போட்டியில் சிஃப்ட் கௌர் சாம்ரா தங்கமும், ஆஷி சோக்ஷிக், வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளார்கள்.
இந்தியாவுக்கு இன்று வுஷு என்ற போட்டியில் வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை தற்போது வரை 24 என உயர்ந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்