Asian Games 2023: 41 ஆண்டு கால காத்திருப்பு! ஆண்கள் ஒற்றையர் பேட்மிண்டனில் பதக்கம் வென்று வரலாறு படைத்த எச்எஸ் பிரணாய்
Oct 06, 2023, 04:53 PM IST
41 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின்னர் ஆசிய விளையாட்டு ஆண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கத்தை பெற்று தந்து வரலாறு படைத்துள்ளார் எஸ்எஸ் பிரணாய்.
ஆசிய விளையாட்டு போட்டியின் 13வது நாளான இன்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் இந்தியாவின் நட்சத்திர வீரர் எச்எஸ் பிரணாய் வெண்கலம் வென்றுள்ளார். சீனா வீரர் லீ ஷி பெங் என்பவருக்கு எதிரான போட்டியில் 21-16, 21-9 என்ற நேர் செட்களில் தோல்வியை தழுவினார். இவர்கள் இருவருக்கும் இடையிலான போட்டி சுமார் 45 நிமிடங்கள் வரை நீடித்தது.
இதையடுத்து தங்க பதக்கம் வெல்லும் வாய்ப்பை பிரணாய் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெண்கலத்துடன் வெளியேறினார். ஆனாலும் அவர் பெற்ற வெற்றி வரலாற்று சிறப்பு வாய்ந்தவையாக அமைந்துள்ளது.
ஆசிய விளையாட்டு ஆண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் 41 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது. இது ஆசிய விளையாட்டில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் இந்தியாவுக்கு கிடைத்த இரண்டாவது தங்கமாக அமைந்துள்ளது. இதற்கு 1982 ஆசிய விளையாட்டில் இந்திய வீரர் சையத் மோடி வெண்கலம் வென்றிருந்தார்.
நடப்பு ஆசிய விளையாட்டில் பேட்மிண்டன் விளையாட்டில் இந்தியாவுக்கு கிடைத்த மூன்றாவது பதக்கமாக பிரணாய் பெற்ற வெற்றி அமைந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனாவுக்கு எதிரான போட்டியில் இந்திய 2-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளி பதக்கத்தை வென்றது. இந்தப் போட்டியில் பிரணாய் காயம் காரணமாக விளையாடவில்லை.
அதேபோல் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய நட்சத்திர ஜோடிகளான சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் வெண்கலம் வென்றனர்.
முன்னதாக, காயத்திலிருந்து முழுமையாக குணமடையாத போதிலும் மலேசியா வீரருக்கு எதிரான காலிறுதி போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றார் பிரணாய். இதன் பின்னர் அரையிறுதியில் தோல்வியை தழுவினாலும் பதக்கத்துடன் வெளியேறியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்