Neeraj Chopra: தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார் நீரஜ் சோப்ரா.. பதக்க வேட்டையில் முத்திரை பதித்த இந்தியா
Oct 04, 2023, 06:59 PM IST
ஆசிய விளையாட்டு வரலாற்றில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு பதக்க வேட்டையை நிகழ்த்தியுள்ளது.
ஆசிய கேம்ஸில் ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை படைத்தார்.
2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தனது முத்திரையைப் பதித்துள்ளது. போட்டி வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பதக்கப் பட்டியலில் இந்தியா சாதனை படைத்துள்ளது. அக்டோபர் 4ஆம் தேதி வரை இந்தியா 18 தங்கப் பதக்கங்கள், 31 வெள்ளிப் பதக்கங்கள், 32 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 81 பதக்கங்களை வென்றுள்ளது.
இன்று, 35 கிமீ ரேஸ் வாக் மிக்ஸ்டு டீம் போட்டியில் இந்திய ரேஸ் வாக்கர்ஸ் மஞ்சு ராணி மற்றும் ராம் பாபு ஆகியோர் வெண்கலப் பதக்கத்தை வென்றனர். அதே நாளில், கூட்டு வில்வித்தை மிக்ஸ்டு அணி போட்டியில் ஜோதி சுரேகா வென்னம் மற்றும் பிரவின் ஓஜஸ் தியோட்டலே தங்கம் வென்றனர். ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் அனாஹத் சிங் மற்றும் அபய் சிங் வெண்கலப் பதக்கத்துடன் நிம்மதி கொண்டனர். குத்துச்சண்டை வீராங்கனை பர்வீன் ஹூடா வெண்கலப் பதக்கம் வென்றார்.
குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன், பெண்களுக்கான 75 கிலோ குத்துச்சண்டைப் போட்டியில் சீனாவின் லி கியானிடம் தோற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அக்டோபர் 4-ம் தேதியின் சிறப்பம்சம் என்னவென்றால், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கத்தை தன்வசப்படுத்தினார் நீரஜ் சோப்ரா.
இதுவரை 11வது நாளின் முக்கிய சிறப்பம்சங்கள் :
1. வில்வித்தை கலப்பு குழு போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.
2. இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் 75 கிலோ பிரிவில் வெள்ளி வென்றார்
3. நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்
4. இந்திய ஆடவர் ஹாக்கி அணி 5-3 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது
6. ஆடவருக்கான கிரேக்க-ரோமன் 87 கிலோ வெண்கலப் பதக்கப் போட்டியில் இந்தியாவின் சுனில் குமார், கிர்கிஸ்தானின் அட்டபெக் அசிஸ்பெகோவை வீழ்த்தினார்.
7. பெண்களுக்கான 800 மீ ஓட்டத்தில் இந்தியாவின் ஹர்மிலன் பெயின்ஸ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
8. 5000 மீட்டர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் அவினாஷ் சேபிள் இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
9. இந்திய குவார்டெட் - வித்யா ராம்ராஜ், ஐஸ்வர்யா கைலாஷ் மிஸ்ரா, பிராச்சி, சுபா வெங்கடேசன் - இறுதிப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தனர். பெண்களுக்கான 4X400M தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்றார்.
ஆசிய விளையாட்டு 2023: எப்படி பார்ப்பது
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023 SonyLIV இல் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. இந்தியாவில் உள்ள சோனி ஸ்போர்ட்ஸ் டிவி சேனல்களிலும் இது நேரடியாக ஒளிபரப்பப்படும்.
ஆசிய விளையாட்டு 2023: இந்தியாவின் பதக்க எண்ணிக்கை
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023: நாடு வாரியாகப் பதக்க எண்ணிக்கை
*இந்தியாவின் பதக்க அட்டவணை கடைசியாக அக்டோபர் 4 அன்று மாலை 6:10 மணிக்கு புதுப்பிக்கப்பட்டது.
ஆதாரம்: பதக்கங்களின் எண்ணிக்கை ஒலிம்பிக்ஸ்.காமில் இருந்து பெறப்பட்டுள்ளன
டாபிக்ஸ்