Asian Champions Trophy Final: நீயா நானா த்ரில் போட்டி - கோப்பையை வென்று சாம்பியன் ஆன இந்தியா
Aug 12, 2023, 11:01 PM IST
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் மலேசியாவை வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றுள்ளது. இரு அணிகளும் 3-3 என கோல்கள் அடித்திருந்த நிலையில், ஆட்டம் முடிவதற்கு 4 நிமிடங்களுக்கு முன் ஆகாஷ்தீப் சிங் கோல் அடித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி இந்தியா - மலேசியா இடையே நடைபெற்றது. இந்த தொடரில் ஒரேயொரு தோல்வியை மட்டும் மலேசியா பெற்றது. இந்தியா அனைத்து லீக் ஆட்டங்களிலும் வெற்றியை பெற்றது.
இதையடுத்து இந்த தொடரில் வலுவான அணிகளாக திகழ்ந்த இந்தியா - மலேசியா மோதிய இறுதிபோட்டி விறுவிறுப்பு குறையாமல் அமைந்திருந்தது. இரு அணிகளும் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் தங்களது முழு பலத்தையும் வெளிப்படுத்தி விளையாடினர்.
இரண்டு அணிகளும் மாறி மாறி கோல்கள் அடிக்க ஆட்டத்தின் இறுதிகட்டத்தில் 3-3 என அணிகளின் ஸ்கோர் சமநிலை அடைந்திருந்தது.
இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் 56வது நிமிடத்தில் ஆகாஷ்தீப் கோல் அடித்த இந்தியா முன்னேறியது. முழு ஆட்ட நேர முடிவில் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய வென்றதுடன் கோப்பையும் தட்டி தூக்கியது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்