தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asia Cup 2023: இந்திய அணி ஜெர்சியில் முதல் முறையாக பாகிஸ்தான் பெயர்! ஏன் தெரியுமா?

Asia Cup 2023: இந்திய அணி ஜெர்சியில் முதல் முறையாக பாகிஸ்தான் பெயர்! ஏன் தெரியுமா?

Aug 10, 2023, 01:44 PM IST

google News
வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணி அணியும் ஒரு நாள் போட்டிக்கான ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம்பிடிக்க வாய்ப்பு உள்ளது.
வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணி அணியும் ஒரு நாள் போட்டிக்கான ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம்பிடிக்க வாய்ப்பு உள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணி அணியும் ஒரு நாள் போட்டிக்கான ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம்பிடிக்க வாய்ப்பு உள்ளது.

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் அணி நடத்துகிறது. இந்த தொடர் ஒரு நாள் போட்டிகளாக நடைபெறுகிறது. இதையடுத்து பாகிதானில் நடைபெறும் இந்தப் போட்டியில் பாதுகாப்பு காரணங்களை காட்டி இந்தியா பங்கேற்காது என பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆனால் தொடரை நடத்துதை விட்டுக்கொடுக்கபோவதில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அடம்பிடித்த நிலையில், பாகிஸ்தான், இலங்கை ஆகிய இரு நாடுகளில் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெறும் எனவும், இதர போட்டிகள் இலங்கையில் நடைபெறும் விதமாகவும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் முடிவு செய்யப்பட்டது.

அப்படி பார்க்கையில் மொத்தம் நடைபெற இருக்கும் 13 போட்டிகளில், ஒன்பது போட்டிகள் இலங்கையிலும், நான்கு போட்டிகள் பாகிஸ்தானிலும் நடத்தப்படவுள்ளது.

ஆசிய கோப்பை 2023 தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் அணி பெற்று இருப்பதால், எல்லா அணிகளின் வீரர்களின் ஜெர்சியிலும் ஆசிய கோப்பை பாகிஸ்தான் என்ற பெயர் நிச்சயம் இடம்பெற்றாக வேண்டும். இது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி எழுந்தது.

இதையடுத்து இந்திய அணி நிர்வாகம் இதற்கு சம்மதம் தெரிவித்திருப்பதாக தெரிகிறது. இது போட்டியை நடத்தும் நாட்டுக்கான அங்கீகாரமாக மட்டுமல்லாமல், விளையாட்டுக்கான ஒற்றுமையையும் குறிப்பதாக அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் வரலாற்றில் முதல் முறையாக ஆசிய கோப்பை 2023 தொடரில் இந்தியா அணியும் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயரும் இடம்பெறவுள்ளது.

ஆசிய கோப்பை 2023 தொடரில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெறுகின்றன.

முதல் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் இருக்கும் அணிகள் தங்களுக்குள் தலா ஒரு போட்டியில் மோதிக்கொள்ளும். இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இரண்டாவது சுற்றில் முன்னேறும் நான்கு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாடும். இதில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.

இந்த தொடரின் முதல் போட்டி பாகிஸ்தான் - நேபாளம் அணிகளுக்கு இடையே முல்தான் மைதானத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்குகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி இலங்கையில் உள்ள பல்லேகெலே மைதானத்தில் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி